இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகளை மாற்றவது தொடர்பாக அறிவிப்பினை வெளியிடும். அதே சமயம் அதனை செய்துமுடிப்பதற்கு காலக்கெடு விதித்திருந்தாலும், ஒரு சிலவற்றை அடுத்த மாதமே நடைமுறைக்குக் கொண்டுவரும் என்ற அறிவிப்பினையும் மத்திய அரசுகள் வெளியிடும். அந்த வரிசையில் வருகின்ற செப்டம்பர் மாதம் அதாவது நாளை முதல் அமலுக்கு வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன? என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரவுள்ளது என்பது குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம்.





முதலில் ஆதார்பான்கார்டு இணைப்பதற்கு விதிக்கப்பட்டுள்ளக் காலக்கெடு என்னவென்று பார்ப்போம். இந்தியாவில் வருமான வரித்துறையும், வங்கிகளும் அனைத்து மக்களும் ஆதார்- பான் கார்டினை இணைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இல்லாவிடில் வங்கிகளில் எந்தச் சலுகைகளையும் பெற முடியாது எனவும், குறிப்பிட்டக் காலத்திற்குள் இணைக்காதப் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது.  இதன்படி இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களுடன் இயங்கி வரும் மிகப்பெரிய வங்கியான பாரத் ஸ்டேட் பாங்க்( எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக ஆதார் – பான்கார்டுகளை இணைத்திருக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளது.


 பிஎஃப்- ஆதார் இணைப்பு: மாத வருமானம் பெரும் அனைவருக்கும் நிச்சயம் பிஎஃப் எனப்படும் வருங்கால வைப்பு நிதிகணக்கினைக்கொண்டிருப்பார்கள். சில நேரங்களில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் பொருளாதாரத்தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கு அவர்கள் கணக்கில் இருந்து பணத்தினை எடுத்துவருகின்றனர். ஆனால்  இனி மேல் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தினை எடுக்க வேண்டும் என்றால்,  சமூகப்பாதுகாப்புக் குறியீடு 2020 சட்டம் 142 வது பிரிவின் படி, பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணினை இணைந்திருக்க வேண்டும். ஒரு வேளை அவ்வாறு இணைக்காவிடில், அவர்களது நிறுவனத்திலிருந்து ஊழியர்களுக்கு மாதம் செலுத்தப்படும் தொகை பிஎஃப் கணக்கில் சேராது என தெரிவிக்கப்பட்டிருந்தது.





ஆனால் கொரோனா தொற்றின் 2 வது அலையின் காரணமாக மக்கள் பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில் தான், மக்கள் கோரிக்கைகளை ஏற்று செப்டம்பர் 1 ஆம் தேதிக்குகள் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. . எனவே உடனடியாக அனைத்து ஊழியர்களும்  பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணினை இணைக்க www.epfindia.gov.in என்றை இணையத்தினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


ஜிஎஸ்டி தாக்கல்: சரக்கு மற்றும் சேவை வரிச்செலுத்துவோர்  புதிய விதிகளின் படி செப்டம்பர் மாதம் முதல் GSTR-3B படிவத்தைத் தாக்கல் செய்யாதவர்களால் GSTR-1 படிவத்தை இனித்தாக்கல் செய்ய முடியாது.