அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளை மத்திய அரசு தடை செய்ய உள்ளதையடுத்து, சந்தையில் பெரும்பாலான தனியார் கிரிப்டோ கரன்சிகள் மதிப்பை இழந்து வருகின்றன.
இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில், ரிசர்வ் வங்கி மூலம் இந்தியாவில் டிஜிட்டல் கரன்சிக்கான புதிய கட்டமைப்பை உருவாக்கவும், அனைத்து வகையான தனியார் கிரிப்டோ கரன்சிகளையும் தடை செய்யவும் கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்கிறது.
சமீபத்திய தரவுகளின் படி, பிட்காயின் – 55,460.96 டாலர் (20%)
எதிரியம் – 4,167 டாலர் (-0.86%)
சொலானா – 4,167 டாலர் (-1.24%)
முன்னதாக, சிட்னி பேச்சுவார்த்தையின் தொடக்க நிகழ்வில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, " வளர்ந்துவரும் கட்டமைப்பு “தேசிய உரிமைகளை அங்கீகரிக்கவேண்டும், அதே சமயம் வர்த்தகம், முதலீடு, பரவலான மக்கள் நலன் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும்" என்று கூறினார். இதற்கு கிரிப்டோ கரன்சியை உதாரணமாக கூறிய அவர், “இந்த விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும், இது நமது இளைஞர்களை பாழாக்குவோரின் தவறான கைகளுக்கு சென்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்" என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையே, மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி நிலைத்தன்மைக் கண்ணோட்டத்தில் கிரிப்டோகரன்சிகள் மிகவும் தீவிரமான கவலையை ஏற்படுத்துவதாக சக்திகாந்த் தாஸ் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தின் கிரிப்டோகரன்சி மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2021, அறிமுகத்திற்காக பட்டியலிடப்பட்டுள்ள மொத்தம் 26 மசோதாக்களில் ஒன்றாகும். கிரிப்டோ நிதியின் பரந்த வரையறைகள் குறித்த முதல் நாடாளுமன்றக் குழு விவாதத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இது வருகிறது. அங்கு பிட்காயின்களை நிறுத்த முடியாது. ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்ஸ், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் (பிஏசிசி), தொழில் அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களின் பிரதிநிதிகளை கடந்த நவம்பர் 16 ஆம் தேதி பாஜகவின் ஜெயந்த் சின்ஹா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்