Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது.


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 183.74% அல்லது 0.31 % புள்ளிகள் சரிந்து 59,727.01 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 46.70% அல்லது 0.26% புள்ளிகள் சரிந்து 17,660.15 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.


தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன.


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


டிவிஸ் லேப்ஸ், ஹெச்.சி.எல்., நெஸ்டே, இந்துஸ்லேண்ட் வங்கி, சிப்ளா,விப்ரோ, டாக்டர். ரெட்டி லேப்ஸ், கோல் இந்தியா, ஈச்சர் மோட்டார்ஸ், மாருதி சுசூகி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ. வங்கி, என்.டி.பி.சி., லார்சன், பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


பவர்கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசர்ஸ்,ரிலையன்ஸ், அப்பல்லோ மருத்துவமனை, க்ரேசியம், பஜார்ஜ் ஆட்டோ, ஹூரோ மோட்டார்க்ராப், அதானி போர்ட்ஸ், பிரிட்டானியா, பஜார்ஜ் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எடெக் மகிந்திரா, பஜார்ஜ் ஃபின்சர்வ், ஐ.டி.சி., டி.சி.எஸ்., ஜெ.எஸ்.டபுள்யு. ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.  






காலை நிலவரம்:


இன்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.


மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 103 அல்லது 0.17% புள்ளிகள் உயர்ந்து 60,013.83 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 28.95 அல்லது 0.16% புள்ளிகள் உயர்ந்து 17,735.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.  நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தை பலத்த அடிவாங்கிய நிலையில், இன்று ஏறுமுகத்தில் வர்த்தக தொடங்கியது முதலீட்டாளர்களை ஆறுதல் அளித்துள்ளது.


ரூபாய் மதிப்பு:






அமெரிக்க டாலருகு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.04 ஆக இருந்தது. இது காலை நிலவரத்தை விட, 3 பைசா குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.




மேலும் வாசிக்க..


SSC Exam in Tamil: முதல்முறை; இனி தமிழிலும் எஸ்எஸ்சி தேர்வை எழுதலாம்- மத்திய அரசு அறிவிப்பு


Thiruvisanallur Temple: பெண் சாபத்திற்கு ஆளாகியிருந்தால் இந்த கோயிலில் வழிபட சாபம் பாவம் நீங்கும்