சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 42வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை:  


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை  கணிசமாக சரியத் தொடங்கியுள்ள போதிலும், இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமல்  இருந்து வருகிறது. 


கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் ஒபெக்+ எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று  எதர்பார்க்கப்படுகிறது. 



நடப்பு நிதியாண்டில் வெறும் 7 முறை தான் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது


கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செலவில் 8% குறைந்த நிலையிலும், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமல் வருகிறது. முன்னதாக, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தர்மபுரி எம்.பி செந்தில்குமார், "


எண்ணெயை சந்தைபடுத்தும் நிறுவனங்களுக்கு லாபத்தில் இயங்கிகொண்டிருகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகஸ்தர்களின் நிலை மோசமாகி வருகிறது. 40 மாதங்களுக்கு மேலாக அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனைக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆகையால் இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அபூர்வா சந்திரா குழுவின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார். 


கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. 


முன்னதாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை மட்டுப்படுத்த சேமிப்புக் கிடங்குகளில் இருந்து 50 மில்லியன் மெட்ரிக் டன்களை சந்தையில் விற்கப்போவதாக அமெரிக்கா  அறிவித்தது. கச்சா எண்ணெய் பயன்படுத்தும் 3வது பெரிய நாடான இந்தியாவும் தன் பங்குக்கு தன் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள 5 மில்லியன் மெட்ரிக் டன்களை வெளியிடுவது குறித்து கலந்தாடி வருகிறது.