மக்களின் பொருளாதார அத்தியாவசியங்களில் ஒன்றாக மாறியுள்ளது தங்கம். சென்னையில் நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராமிற்கு ரூபாய் 6 ஆயிரத்து 680க்கு விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி ரூபாய் 20 குறைந்து கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 660க்கு விற்பனையாகிறது. இதனால், சவரன் தங்கம் ரூபாய் 160 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 53 ஆயிரத்து 280க்கு விற்பனையாகிறது.


 சற்றே குறைந்த தங்கம் விலை:


24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 7 ஆயிரத்து 115க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு சவரன் ரூபாய் 56 ஆயிரத்து 920க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 91.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 91 ஆயிரத்து 700க்கு விற்கப்படுகிறது.


மத்திய நிதிநிலை அறிக்கைக்கு பிறகு மூன்று நாட்கள் குறைந்த தங்கம் விலை பின்னர் மீண்டும் உயரத் தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஏற்றம் பெற்று வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இருப்பினும், தங்கம் விலை தொடர்ந்து ரூபாய் 53 ஆயிரத்தை கடந்தே விற்பனையாகி வருகிறது. இது சாமானிய மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


மீண்டும் கட்டுக்குள் வருமா தங்கம்?


ஆடி மாதம் முடிந்துள்ள நிலையில் இனி வரும் மாதங்களில் அடுத்தடுத்து திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் தங்க நகைகளின் விலை தொடர்ந்து உச்சத்திலே இருப்பது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்ந்து தங்கம் விலை உச்சத்திலே இருந்து வருவதால் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்தது போலவே ஏதேனும் அதிரடி நடவடிக்கையை எடுத்து மீண்டும் தங்கம் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.