எல்.ஐ.சியிலிருந்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ மே 4 ஆம் தேதி திறக்கப்பட்டு, மே 9 ஆம் தேதி நிறைவடையும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் 3.5 சதவீத பங்குகளை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளது.
இந்தியாவில் முதலீட்டுச்சந்தை ரஷ்ய – உக்ரைன் போர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், நீண்ட காலப்பபோராட்டத்திற்குப் பின்ன மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் நிறுவனம் ஐபிஓ வெளியிடு செய்யும் நாளை இன்று அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் வெளியிடுவதாக இருந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ஒத்திவைத்தது குறிப்பிடத்தது. தற்போது மே 4 ஆம் தேதி திறக்கப்பட்டு மே 9 ஆம் தேதி நிறைவடையும் என இன்று அறிவிப்பு வெளியானது
குறிப்பாக இந்தியாவில் முதலீட்டு சந்தை மீண்டு வந்துள்ள நிலையில், மத்திய அரசு, பல மாற்றங்கள் உடன் நடப்பு நிதியாண்டில் நிதி நெருக்கடியைக்குறைக்கும் விதமாக 21, 257 கோடி ரூபாய் அளவிலான நிதியை இந்த எல்ஐசி ஐபிஓ மூலம் திரட்ட உள்ளது. முன்னதாக ரூ.13,00,000 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ.6,00,000 கோடியாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் 1.1 மடங்கு விலை இதன் மூலம் எல்ஐசியின் உட்பொதிக்கப்பட்ட மதிப்புகள் அதாவது embedded value சுமார் ரூ.5,40,000 கோடியாகவும் இருக்கும், எனவே எல்ஐசி ஐபிஓ அதன் உட்பொதிக்கப்பட்டதை விடச் சுமார் 1.1 மடங்கு அதிகமாக மட்டுமே மதிப்பிடப்படுகிறது.
லாபம் பொதுவாகத் தனியார் நிறுவனங்கள் ஐபிஓ-வில் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை விடவும் 2-3 மடங்கு மதிப்பீட்டில் தான் ஐபிஓ வெளியிடும். ஆனால் எல்ஐசி ரூ.6,00,000 கோடி மதிப்பீடு உடன் 1.1 மடங்கு உட்பொதிக்கப்பட்ட மதிப்பில் ஐபிஓ வெளியிட உள்ளதால் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டும் அல்லாமல் மிகப்பெரிய அளவில் லாபம் அளிக்கும் ஐபிஓ-வாக எல்ஐசி விளங்கும்.
தள்ளுபடி எல்ஐசி பாலிசியுடன் பான் கார்டு இணைக்கப்பட்ட எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இந்த ஐபிஓவில் ரூ.902-949 விலையில் ரூ.60 தள்ளுபடியும், எல்ஐசி ஊழியர்களுக்கும், ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் ரூ.45 தள்ளுபடியும் அளிக்கப்பட உள்ளது. 3.5% பங்கு மட்டுமே எல்ஐசி தனது ஐபிஓ அளவை பெரிய அளவில் குறைந்துள்ள வேளையிலும் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிட உள்ளது எல்ஐசி.
முதல் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்த லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தற்போது 3.5% பங்குகளை மட்டுமே விற்பனை செய்ய உள்ளது. பங்கு ஒதுக்கீடு இந்த ஐபிஓ-வில் எல்ஐசி விற்பனை செய்யும் 3.5 சதவீத பங்குகளில் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு (QIBs) 50 சதவீத பங்குகளும், சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீதமும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு 15 சதவீத பங்குகளும் பிரிக்கப்பட்டு உள்ளது. இதோடு மட்டுமின்றி ரீடைல் முதலீட்டாளர்கள் மொத்த ஐபிஓ பங்குகளில் எல்ஐசி நிறுவனம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 35 சதவீத பங்குகளை ஒதுக்கீடு செய்துள்ள காரணத்தால் தாராளமாக அனைத்து முதலீட்டாளர்களும் ஐபிஓ-வில் பங்குகளைப் பெற முடியும் எனவும் ஒரு லாட்க்கு 15 பங்குகள் அதிகப்படியான விலையான 949 ரூபாய் வைத்துக் கணக்கிட்டால் ஒருவர் 14,235 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.