ரிலையன்ஸ் (Reliance) நிறுவனம் 50 ஆண்டு கால வரலாறுகொண்ட பிரபல  கேம்பா கோலா (Campa Cola) குளிர்பானத்தை மீண்டும் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.


முகேஷ் அம்பானி தடம் பதிக்காத துறைகளே இல்லை என்று சொன்னால் மிகையாது. இந்தியாவின் முன்னணி பணக்காரர், தொழிலதிபர் - முகேஷ் அம்பானி. தொழில்நுட்பம், எலக்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது ரிலையன்ஸ் நிறுவனம். 


கேம்பா கோலா


ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் (RRVL-Reliance Consumer Products Ltd) நிறுவனத்துக்கு சொந்தமான ரிலையன்ஸ் கன்சியூமர்ஸ் புராடெக்ட் லிமிடெட் நிறுவனம் 50 ஆண்டுகள் பழமையான ப்ராண்டான கேலா கோலாவை மீண்டும் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.


200 மிலி, 500மிலி, 600 மிலி, 1லி, 2லி  ஆகிய அளவுகளில் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய் என சந்தையில் இது விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த குளிர்பான நிறுவனமாக சோஸ்யோ ஹஜூரி பீவ்ரேஜர்ஸ் பிரைவேட் லிமிடட் (Sosyo Hajoori Beverages Pvt Ltd.) நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானியின் ’ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம்’கடநந்த ஜனவரி மாதத்தில் வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குளிர்பான வர்த்தகத்திலும் முகேஷ் அம்பானியின் நிறுவனம் கால் பதித்துள்ளது. 


குளு குளு ட்ரிங்


 மூன்று வகையான குளிர்பான வகைகளை முதலில் அறிமுகம் செய்துள்ளது. கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா லெமன் எனும் மூன்று வகையான குளிர்பானங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 


 குளிர்பான சந்தையில் பெப்சி, கோகோ கோலா போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள்  ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. நாடு முழுவதும் பல உள்ளூர் பிராண்ட்கள் இருந்தாலும், இவை இரண்டும் சந்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தை கொண்டுள்ளது.இந்த இரண்டு நிறுவனங்களுக்கான சந்தை மதிப்பும் அதிகம். 


கோடை காலம் - ஜில்லுன்னு ஒரு டிரிங்..


'The Great Indian Taste' this summer’ என்ற வாசகத்துடன் 50 ஆண்டுகளுக்கு முன்பு கெம்பா கோலா மிகவும் பிரபலமான குளிர்பானமாக இருந்துள்ளது. பலரும் விரும்பும் ஒன்றாகவும் இருந்துள்ளது.  முதல்கட்டமாக ஆந்திரா, தெலங்கானாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.


இது தொடர்பாக ரிலையன்ஸ் கன்சியூமர் ப்ராட்க்ட்ஸ் லிமிடெட் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “கேம்பா கோலா மக்களுக்கு பிடிக்கும் என்றும், இளம் தலைமுறையினரின் விருப்ப  தேர்வாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்தியர்களின் மனம் கவர்ந்த இந்தப் பானம் 50 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்றும் குறிப்பிட்டார். 1900-களில் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களின் வருகையால் மெல்ல தனது சந்தை வாய்ப்பை இழந்தது கேம்ப கோலா என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் அறிமுக செய்யப்பட்டுள்ளது பலரிடலும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க..


Agilan Movie Review: ஆழியின் அரசனாக ‘அகிலன்’..கடல் அவருக்கு கை கொடுத்ததா? கவிழ்த்துவிட்டதா? விமர்சனம் இதோ!


தொடர் அச்சம்... மார்ச் மாத இறுதிக்குள் H3N2 வைரஸின் தாக்கம் குறையும்... மத்திய அரசு வெளியிட்ட புது தகவல்..!