Budget 2024: மத்திய பட்ஜெட்டில் வருமான வரியின் புதிய திட்டத்தில் உள்ளோருக்கு அதிரடி சலுகைகள் அறிவிப்பு

மத்திய பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைக்கப்பட்டதால், தங்கத்தின் விலையும் குறையும். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க கூடியது.

Continues below advertisement

இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எண்ணற்ற திட்டங்கள் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு புதிய திட்டங்கள் என அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

குறிப்பாக புதிய வருமான வரிமுறையில் வரி சலுகை பெறுவதற்கான நிரந்தர கழிவு ருபாய் 50 ஆயிரத்தில் இருந்து ருபாய் 75 ஆயிரமாக உயர்த்தபட்டுள்ளது. தனி நபர் வருமான வரியில் மாற்றம் என புதிய அதிரடி சலுகையை இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இது குறித்து பங்குச்சந்தை வல்லுனர்கள் தெரிவித்தது..

இந்த மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் அளிக்கவில்லை.


தனிநபர் வருமான வரியில் புதிய சலுகைகள் என்ன

தனிநபர் வருமான வரியில் புதிய சலுகையில் ரூபாய் 17,500 மிச்சப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சலுகை ஆண்டுக்கு 7 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் 3 முதல் 7 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர்களுக்கு பயன் இருக்காது. 

மத்திய பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதா..??

ஆண்டுக்கு 7 முதல் 10 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் நடுத்தர மக்கள் என்று கருதினால் நிச்சயம் இந்த அறிவிப்பு அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக 60 ஆயிரம் டேக்ஸ் கட்ட வேண்டிய இடத்தில் குறைந்து குறைந்தது 45 ஆயிரம் கட்டுவது போல் இருக்கும்.

மேலும் மியூச்சுவல் ஃபண்டில் 10 சதவீத வரியை 12 சதவீத வழியாக வைத்துள்ளார்கள். சில சலுகைகள் வழங்குவது போல் வழங்கி சில இடங்களில் டேக்ஸ் வரியை உயர்த்தி உள்ளார்கள்.

இந்த பட்ஜெட்டில் குறிப்பாக பார்க்க வேண்டும் என்றால் தங்கம் விலை குறைவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. தங்கத்திற்கு 12 சதவீதம் வரியை 6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளார்கள். இதனால் தங்கத்தின் விலை குறையும் இந்த அறிவிப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

பங்குச்சந்தை சரிவு காரணம் என்ன?

பங்குச்சந்தையில் அனைவரும் தங்களுடைய பணத்தை முதலீடு செய்கிறார்கள். ஆனால் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்டிற்கான  வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஷேர் மார்க்கெட் என்பது ஒரு சூதாட்டம் ஒன்று ஆகும். அதேசமயம் வங்கிகளில் சேமிப்பு கணக்கில் யாரும் பணத்தை செலுத்தாமல் இருப்பதால் வங்கிகள் கஷ்டப்படுகிறது.

இந்த மத்திய பட்ஜெட்டில்  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரியை உயர்த்தவில்லை. குறிப்பாக இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை , அதேசமயம் பீகார் ஆந்திரா மாநிலங்களுக்கான பட்ஜெட் ஆக இது அமைந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் பல இடங்களில் ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால் மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அதேபோன்று இளைஞர்கள் தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பணியில் சேர்ந்தால் மாதம் 5000 ரூபாய் என மூன்று மாதத்திற்கு ரூபாய் 15,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கார்பெட் தொழில்கள் அதிக அளவில் இல்லை.  சிறு மற்றும் குறு தொழில் அதன் வளர்ச்சிக்கு எந்த அறிவிப்பும் அறிவிக்கவில்லை. இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க பீகார், ஆந்திரா அரசுக்கானது என சொல்லும் வகையில் அமைந்துள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டிற்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

Continues below advertisement