இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்தியாவின் கடந்த கால பொருளாதார வளர்ச்சிகளுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசி வரும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, இந்தியாவின் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகியதாக கூறினார். 


பட்ஜெட் உரையில் அவர் பேசியதாவது, "இந்தியா ஒரு நம்பிக்கை நட்சத்திரம் என உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தில் 9.6 கோடிகள் சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் காப்பீடு திட்டங்களால் 44 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்.




உலக பொருளாதாார தரவரிசையில் 10வது இடத்தில் இருந்த இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை மக்களுக்கு இலவசமாக தானியங்கள் வழங்கப்பட்டன. இலவச உணவு தானியங்கள் அளிக்கும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுகிறது.


ஜி20 நாடுகளின் மாநாட்டில் இந்தியா தலைமை ஏற்றிருப்பது மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். பிரதமரின் காப்பீடு திட்டங்களால் இந்தியாவில் 44 .6 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை மிக அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளது.  நாடு முழுவதும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 2.2 லட்சம் கோடி நேரடியாக பணம் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.75 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.




டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை மிக அதிகளவில் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டில் 1.24 கோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. நாட்டில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகி உள்ளது. நாட்டில் தனிநபர் வருமானம் ரூபாய் 1.97 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த வளர்ச்சி, சுற்றுலாத்துறைக்கு ஊக்கம்  ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  வேளாண்துறையில் புத்தாக்க தொழில்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


நாடு முழுவதும் 220 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக நிதி அதிகரிக்கப்படும். வரும் நிதியாண்டில் 20 லட்சம் கோடி விவசாயக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.”


இவ்வாறு அவர் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். 


பட்ஜெட் குறித்த லைவ் அப்டேட்ஸ்க்கு... இங்கே கிளிக் செய்யவும்...


Budget 2023 LIVE: ரயில்வே திட்டங்கள்: ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!