Tamil Nadu Budget 2025: மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு


2025 - 26 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கு நாள்தோறும் வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8000 ஆக உயர்த்தப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.


மீன்பிடி தடைக்கால உதவித்தொகை


தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி ஜுன் மாதம் 14-ம் தேதி நிறைவடையும்.


கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் விசை படகுகள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டும். திருவள்ளூர் தொடங்கி கன்னியாகுமரி வரை மீனவர்கள் இந்த காலத்தில் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள். ஏப்ரல் முதல் ஜூன் வரை மீனவர்கள் தங்கள் விசை படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள்.


தமிழ்நாட்டில் இன்று முதல் விசை படகுகள் கடலுக்கு செல்லாது என்ற காரணத்தால் மீன் வரத்து படிப்படியாக குறையும். அதேபோல் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் கிடைக்காது. இதனால் மீன் விலை உயரும். மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து மீன் கொண்டு வரப்படும். பொதுவாக வஞ்சிரம், வவ்வால், காலா, பன்னை, டூனா, டைகர் இறால், புளூ கிராப், மட் கிராப், லாப்ஸ்டர், கனவா, திருக்கை ஆகிய மீன் வகைகள் ஆழ்கடலில் கிடைக்கும் மீன்கள் ஆகும். இவை அனைத்தும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும்.


இலங்கை சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கு நாள்தோறும்  உதவித்தொகை ரூ.500


இந்த நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர் குடும்பத்திற்கு நாள்தோறும் வழங்கப்பட்ட உதவித்தொகை ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி தடைக்கால உதவித்தொகை ரூ.8000 ஆக உயர்த்தப்படுகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதில் மாநில அரசின் பங்களிப்பு ரூ.6500 எனவும் , மேலும் திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி உள்ளிட்ட கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் அளிக்கப்பட முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.