2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.


சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர் சென்னைக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


அதன்படி, “சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும்.


சென்னை அருகே 2000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் உருவாக்கம் செய்யப்படும்.


570 கிலோமீட்டர் சாலைகள் 486 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னையில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயம்புத்தூரிலும் 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பகுதியிலும் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்.


சென்னை மாநகரத்தில் வாகன போக்குவர்த்து அதிகப்படியாக உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வேளச்சேரி சந்திப்பு முதல் குருநானக் கல்லூரி வரை 3 கி.மீ தூரத்துக்கு ஒரு மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பாலம் 310 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


அனைத்து நகர்புற சாலைகளை மேம்படுத்த ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியின் கீழ் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம், இயற்கை எரிவாயு நிலையம், 21 மெகாவாட் திறன் கொண்ட மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்கப்படும்.


சென்னை அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும்.


அடையாறை மீட்டெடுக்கும் திட்டம் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. 30 மாதம் காலத்திற்கு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல் கட்டமாக சைதாப்பேட்டை முதல் திருவிக இல்லம் வரை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


மழை நீரை உரிஞ்சும் வகையில் ஸ்பாஞ் ஸ்பா திட்டம் ரூ.88 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.