TN Assembly LIVE:5 வயது வரை அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லை- அமைச்சர் சிவசங்கர்
TN Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் விவாதம் தொடர்பான உடனுக்குடன் தகவல்கள்..!
5 வயது வரை குழந்தைகளுக்கு அரசு பேருந்துகளில் கட்டணமில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். மசோதாபடி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநருக்கு பதில் தமிழ்நாடு அரசு நியமிக்கும்.
இந்தாண்டு மூன்று சித்தர்களுக்கு விழா எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சம்சாரம் இல்லாமல் இருக்கலாம் ; ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.
திருத்தணி அடுத்த ராக்கி பேட்டை வட்டத்தில் சிப்காட் வணிக வளாகம் அமைக்க அரசின் பரிசீலனையில் இல்லை என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
வடசென்னை முழுவதும் உள்ள பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி புதிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை அரசே நியமிக்க அதிகாரமளிக்கும் மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.
திருவண்ணாமலை விசாரணை கைதி மரணம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டப்பேரவையில் விளக்கமளித்தார். அதில், கைதியின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
Background
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெற்றது. அதன்பின்னர் தற்போது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்து மற்றும சுற்றுலா துறைகளின் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. இன்றைய நிகழ்வில் போக்குவரத்துதுறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் முக்கிய அறிவுப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -