RRTS (Regional Rapid Transit System): புதுடெல்லியில் இருப்பதை போன்று தமிழ்நாட்டிலும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு பேசியதாவது: தமிழ்நாட்டில் ஏற்பட்டு வரும் பரவலான பொருளாதார வளர்ச்சி. விரிவான நகரமயமாக்களை கருத்தில் கொண்டு, தலைநகர் புது டெல்லி-மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையே மிக மற்றும் அதிவேக ரயில் போக்குவரத்து இயக்கப்படுவதைப் போன்று, மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு ஒன்றினை தமிழ்நாட்டில் ஏற்படுவதற்காக சாத்தியக்கூறுகள் ஆராயப்பட உள்ளது.
ஒரு மணி நேரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மிக அதிவேக ரயில்வே அமைப்பினை, மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் விரிவான சாத்தியக்கூறிகள் ஆய்வு செய்யப்படும் என சட்டமன்றத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவர் அறிவித்த மூன்று வழித்தடங்கள் குறித்து பார்ப்போம்.
சென்னை-திண்டிவனம்
சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக திண்டிவனத்திற்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வழித்தடம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது
சென்னை-வேலூர்
சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வேலூருக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில், 140 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பு அமைக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூர் - சேலம்
கோயம்புத்தூரில் இருந்து திருப்பூர் ஈரோடு சேலம் வழியாக சேலத்திற்கு, 185 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த போக்குவரத்து அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், நீண்ட தூரத்தை ஒரு சில நிமிடங்களில் கடந்து விட முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.