TN Budget 2022: 6 வழிச்சாலையாக மாறும் சென்னை ஈசிஆர் - நிதி ஒதுக்கிய தமிழக அரசு..!

Tamil Nadu Budget 2022: துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Continues below advertisement

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த உரையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். இந்த திட்டத்திற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.

TN Budget 2022: சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அமளி..! பட்ஜெட் படிப்பதை பாதியில் நிறுத்திய நிதியமைச்சர்...!

மேலும், துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை திட்டத்திற்கு ரூ.5,770 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும், முக்கிய சாலையான காட்டுப்பாக்கம் சந்திப்பு சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக,இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.

ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார். இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement