2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.


2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த உரையில் கால்நடை பராமரிப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவில்லாத கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசு சாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது” என்று அமைச்சர் அறிவித்தார். மேலும், கால்நடை பராமரிப்புத் துறைக்கு ரூ.1,314 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


TN Budget 2022: சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அமளி..! பட்ஜெட் படிப்பதை பாதியில் நிறுத்திய நிதியமைச்சர்...!


முன்னதாக,இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.


ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார். இதனைத்தொடர்ந்து, பட்ஜெட் உரையை புறக்கணித்து சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண