Gas Cylinder price: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதம் இந்திய சந்தையில் கேஸ் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படுகிரது. அந்த வகையில் பிப்ரவரி 1ம் தேதியான இன்று வணிக சிலிண்டரின் விலை 12 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1925 ரூபாய் 50 காசுகள் என விற்பனையாகி வந்த  கேஸ் சிலிண்டர், இன்று முதல் 1937 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வணிக கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருவதால், உணவகங்களில் உணவுப் பொட்ருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது வெளியூர்களில் தங்கி உணவகங்களை நம்பி வேலை பார்க்கும் இளைஞர்களுக்கு பெரும் சுமையாய் கருதப்படுகிறது.  அதேநேரம், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி அதே 918 ரூபாய் 50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.


பலிக்காத எதிர்பார்ப்பு:


கடந்த ஜனவரி 1ம் தேதி 19 கிலோ கிராம் எடை கொண்ட வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது. இதனால் ரூபாய் 1,929க்கு விற்கப்பட்டு வந்த வணிக சிலிண்டர் விலை  ரூபாய் 1,924.50 ஆக குறைந்தது. முன்னதாக கடந்த டிசம்பர் 22ஆம் தேதி, வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 39.50 குறைப்பட்ட நிலையில், புத்தாண்டில் மேலும் ரூபாய் 4.50 குறைக்கப்பட்டது வணிகர்களுக்கு புத்தாண்டில் ஒரு ஸ்வீட் நியூஸாக அமைந்தது. இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் தேர்தல் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதத்திலும் வணிக சிலிண்டர் விலை குறையும் என வியாபாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு நேர் எதிராக வணிக சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


விலை மாற்றம் ஏன்?


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க முடியும். ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் கடந்த 620 நாட்களுக்கும் மேலாக எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதேபோல், சமையலுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் நாள் அல்லது 16ம் தேதி அன்று மாற்றி அமைக்கலாம். இதன் அடிப்படையில் பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டர் விலையில் ரூபாய் 12.50 உயர்த்தப்பட்டுள்ளது.