சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கருத்து கூறியுள்ளார்.


2022 - 23ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் பேட்டி அளித்தார். அவரது பேட்டியில், ‘ஜிஎஸ்டி, வருவான வரி சலுகைகள் இல்லாமல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. மத்திய பட்ஜெட்டில் வரி சலுகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்கான அறிவிக்கப்பட்ட அனைத்து மானியங்களும் குறைக்கப்பட்டுள்ளன.


நாட்டில் அதிகரித்து வரும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதற்கான எந்த திட்டம் வகுக்கப்படவில்லை. நாட்டில் ஏழை மக்களும் இருக்கிறார்கள் என்பதை தற்போதுதான் நிதியமைச்சர் நினைவு கூர்ந்துள்ளார். ஏழைகள் என்ற வார்த்தை பட்ஜெட்டில் 2 முறை இடம்பெற்றுள்ளது. ஏழைகளை மறக்காமல் இருந்ததற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விவசாயம், அதை சார்ந்த அனைத்து துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. ஒரு நிதி அமைச்சரால் வாசிக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கான பட்ஜெட் உரை இதுதான்” என்று கூறினார்.


மேலும், அவர் பேசுகையில், “தமிழில் ஒரு பழமொழி உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை என்று. அதுதான் இந்த பட்ஜெட். ஏழை மீண்டும் மீண்டும் ஏழையாகவே உள்ளான். பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவதற்கான பட்ஜெட் இது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஜீரோ ஜீரோ பெரிய ஜீரோ....” எனத் தெரிவித்துள்ளார்.


 






 






 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண