சேலம் மாநகராட்சியின் 2024 - 2025 ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சேலம் மாநகராட்சியின் மேயர் ராமச்சந்திரன் வரவு செலவினை மாமன்ற கூட்டத்தில் வெளியிட்டார். குறிப்பாக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பருவ காலங்களில் வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு ரூ.65 கோடி மதிப்பில் சாக்கடை வசதி செய்தல்.


நாய்களுக்கான அறுவை சிகிச்சைக்கான கூடுதல் கட்டிடம் கட்டுதல் ரூ. 2 கோடி.


இஸ்மாயில்கான் ஏரியினை அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல் ரூ. 41 கோடி.


OSR இடங்களை கணிணி மயமாக்குதல்.


கோட்டம் எண்: 44-ல் குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகில் மாநகராட்சி இடத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளுதல்.


ஏடிசி நகர் முதல் டிவிஎஸ் பாலம் வரை உள்ள வரட்டாறு பாலம் அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளுதல் ரூ.57 இலட்சம்.



ஐந்து தியேட்டர் பின்புறம் உள்ள ஆலமரத்துக்காடு அருகில் புதிய பாலம் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல். 


மூலப்பிள்ளையார் கோயில் ஓடை ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் அமைத்தல்.


நெய்மண்டி அருணாச்சலம் தெரு முதல் செவ்வாய்பேட்டை இணைப்பு பாலம் திருமணிமுத்தாறு இடையே ரூ.2.00 கோடி மதிப்பீட்டில். 


நெய்மண்டி அருணாச்சலம் தெரு முதல் செவ்வாய்பேட்டை இணைப்பு பாலம் திருமணிமுத்தாறு இடையே ரூ. 2.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். (சீரங்கன் தெரு)


கொண்டலாம்பட்டி பழைய சுடுகாடு பகுதியில் மின் மயானம் அமைத்தல் ரூ. 3 கோடி.


நான்கு வார்டு அலுவலகங்களுக்குட்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான 1/2 ஏக்கர் முதல் 1 ஏக்கர் உள்ள ஏதேனும் ஒரு காலி இடத்தினை கண்டறிந்து அப்பகுதியினை விற்பனை மண்டலம் (Vending Zone) பகுதியாக அறிவித்தல்.


புதியதாக வருமானம் தரக்கூடிய இடங்களைக் கண்டறிந்து கட்டிடம் கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டுதல்.


மாநகராட்சி பள்ளிகளை நவீன மயமாக்குதல் ரூ.20 கோடி.


சந்தைப் பேட்டை வணிக வளாகத்தினை இடித்துவிட்டு நவீன முறையில் வணிக வளாகம் கட்டுதல்.


நகரில் அகலமாக உள்ள சாலைகளில் பசுமை வெளி சாலைகளை உருவாக்குதல்.


தாதம்பட்டி மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைத்தல் - ரூ.3 கோடி.


இராமநாதபுரம் ஓடை வடிகால் வசதி ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துதல்


கோட்டம் எண். 58 க்கு உட்பட்ட ஒன்பதாம்பாலி பகுதியில் கழிப்பிடம் அமைக்க வேண்டும் - ரூ. 0.50 கோடி.


கோட்டம் எண். 58 க்கு உட்பட்ட அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அதில் ஆட்டோ, லாரி சர்வீஸ் ஸ்டேசன் மற்றும் டீசல் பங்க் அமைக்க வேண்டும்- ரூ.. 2 கோடி.


கோட்டம் எண். 45 க்கு உட்பட்ட சலவையர் காலனியில் இணைப்புப் பாலம் அமைத்தல் -ரூ.25 இலட்சம்.


மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களான OSR பட்டா நிலங்கள் போன்றவற்றை கண்டறிந்து அவற்றை முள்வேலி அமைத்து பாதுகாத்தல் - ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.


பொதுமக்கள் மீது வரியை திணிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், நிதிநிலை அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை. மக்களுக்கான அடிப்படை திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இல்லை எனவும் குற்றச்சாட்டு. மத்திய அரசு நிதியின் கீழ் செய்யப்படும் திட்டங்களை தவிர மாநகராட்சி திட்டங்கள் ஏதும் இல்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.