புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர், பிரதமர் மோடியின் கனிவான ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மத்திய அரசின் ஒத்துழைப்பு காரணமாக பல்வேறு சமூக நலத்திட்டங்களை கடந்த 4-ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அனைவரையும் உள்ளடக்கிய, சமச்சீர் ஆன பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்தி வருகிறது. அரசின் நிதி ஆராதத்தின் பெரும் பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் ஆகியவை முக்கிய செலவினங்களுக்காக செலுத்தப்படுகிறது
இதில் மாநில வருவாயாக 7,421 கோடி உள்ளது.இதில் 1975.28 கோடி மூலதன செலவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021- 22ஆம் நிதியாண்டு மொத்த செலவினம் 1.6 விழுக்காடு இருந்த நிலையில், 2025- 26 நிதியாண்டில் 9.80 விழுக்காடு கணிசமாக அதிகரித்து உள்ளது.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
புதுச்சேரி காரைக்கால் மாகி மற்றும் ஏனாம் கடலோரப் பகுதிகளில் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு முதல் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
வனம் மற்றும் வனவிலங்கு:
3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. கடல் ஆமை முட்டைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். 13.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கலை மற்றும் பண்பாட்டு துறை:
காரைக்கால் அம்மையார் பெயரில் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
வனம் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் 3- லட்சம் மரக்கன்றுகள் நடத்திட்டமிபட்டுள்ளது.
மரம் நடுவதை ஊக்கப்படுத்தும் வகையில் தொழில் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் பொது மக்களுக்கு 1- லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும்.
புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புரணமைக்கப்படும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வரும் நிதியாண்டு முதல் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும்
புதுச்சேரி அரசு பள்ளிகளில் மதிய உணவில் அனைத்து நாட்களிலும் முட்டை வழங்கப்படும். மதிய உணவு திட்டத்தில் வார இருமுறை வழங்கப்படும் சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்.
6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 1000 வீதம் 3 ஆண்டுகள் மாதம் தோறும் ஊக்குவிப்பு தொகையாக அரசு வழங்கும்
முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு தொகை ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.
கிழக்கு கடற்கரை சாலையில் புதியதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும். இவ்வாறு தெரிவித்தார்.