PM Modi On Budget 2024: "4 பேருக்கு முக்கியத்துவம், இடைக்கால பட்ஜெட் புதுமையானது" - பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi On Budget 2024: மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் புதுமையானது என, பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோவில், ”இந்த இடைக்கால பட்ஜெட் அனைவரையும் உள்ளடக்கியது மற்றும் புதுமையானது. இது தொடர்ச்சியின் நம்பிக்கையைக் கொண்டுள்ளது. எதிர்கால பாரதத்திற்கான 4 தூண்களான இளைஞர்கள், மகளிர்,  ஏழை எளியோர் மற்றும் விவசாயிகளுக்கானது. இந்த பட்ஜெட், 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உத்தரவாதத்தை அளிக்கிறது” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

 

 

இளைஞர்களை பிரதிபலிக்கும் பட்ஜெட்:

தொடர்ந்து, “இந்த பட்ஜெட் இளம் இந்தியாவின் இளம் வயதினரை பிரதிபலிக்கிறது. பட்ஜெட்டில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில், மூலதனச் செலவீனமானது, வரலாறு காணாத அளவுக்கு ரூ.11 லட்சத்து 11 ஆயிரத்து 111 கோடியாக வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்களின் மொழிகளில் பேசினால், இது 'ஸ்வீட் ஸ்பாட்'. இதன் மூலம், 21ம் நூற்றாண்டில் இந்தியாவின் நவீன உட்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதுடன், இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வேலை வாய்ப்புகள் தயாராகும்.

இதையும் படிங்க: 300 யூனிட் மின்சாரம் இலவசம்! யாருக்கெல்லாம்! இதை கண்டிப்பாக செய்யணும்! - பட்ஜெட்டில் அறிவிப்பு

”2 கோடி ஏழைகளுக்கு வீடு கட்டப்படும்”

இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது. மேலும் 2 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 கோடி தகுதியான பெண்களுக்கு ரூ.5 லட்சம் கடன் வழங்குவதற்கு இலக்கு வைத்துள்ளோம். இப்போது ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். வருமான வரி விலக்கு திட்டம் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த 1 கோடி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement