Chennai Corporation Budget 2022 LIVE : சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிதியாண்டில் ஆயிரம் 54 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான தோட்டம் மற்றும் தேங்காய் மட்டை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அறிவிப்புகள்
கடந்த நிதி ஆண்டில் 16,500 எண்ணிக்கையிலான நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100 மெட்ரிக் டன் அளவில் மொத்தம் 1200 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும்.
2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம் - சென்னை பெருநகர பட்ஜெட்டில் அறிவிப்பு
2022 - 2023 ஆண்டில் 3 டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது இது மேலும் அனைத்து மண்டலங்களில் கொண்டு வரப்படும்- மேயர்
2022-2023 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 1.86 கோடியில் internet connection வழங்கப்படும்
பொது சுகாதாரம்
3.50 கோடி செலவில் 3 டயாலிசிஸ் மையம்
5 கோடி செலவில் மருத்துவமனைகள் சீரமைப்பு
கொசு ஒழிப்பு பணிக்கு 4.62 கோடி
2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம்
மீனம்பாக்கம் மற்றும் சோழிங்க நல்லூரில் 80 லட்சம் செலவில் நாய் இனபெருக்க கட்டுப்பாட்டு மையம்
கவுன்சிலருக்கு வார்டு மேம்பாட்டு நிதி 30 லட்சத்தில் இருந்து 35 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. இதன் மூலம் 200 வார்டுகளுக்கு 70 கோடி ஒதுக்கீடு - மேயர் பிரியா அறிவிப்பு.
மாணவிகளுக்கு நிர்பயா நிதி உதவி மூலம் 23.66 கோடி செலவில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் - சென்னை மேயர்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பாலின குழுக்கள் அமைக்கப்படும்
சென்னையில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 66.72 லட்சமாக இருந்த மக்கள் தொகை தற்போது 88 லட்சம்களுக்கு மேலாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறியப்பட்டு உள்ளது- மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். சொத்து வரி உயர்வு குறித்து பேச மேயர் பிரியா அனுமதி கொடுக்காததால் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியின் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் : அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர்
வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-வது வார்டு கவுன்சிலர் சர்பதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகர மேயர் பிரியர் தலைமையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இன்றே ஒப்புதல் நடவடிக்கை
சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. 6 ஆண்டுகளுக்கு பிறகு மேயர் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது
Background
சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. வரி விதிப்பு, நிதிக்குழு தலைவரான 41ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சொத்து வரி, மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட இருக்கிறார். சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு இருக்கிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -