Budget Session LIVE: அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிடவேண்டியதுதானே? - ராகுல் காந்தி
Budget Session Parliament: நாடாளுமன்றத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த செய்திகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.
அதானி, பிரதமரின் நண்பர் இல்லையெனில், விசாரணைக்கு உத்தரவிடவேண்டியதுதானே? - ராகுல் காந்தி
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்கட்சிகள் உறுப்பினர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
"பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசு தலைவர் உயர்த்தியுள்ளார். இன்று, சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, பழங்குடி சமூகத்தில் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக இந்த தேசமும் நாடாளுமன்றமும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
"தொலைநோக்கு உரையில், எங்களுக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் குடியரசு தலைவர் வழிகாட்டியுள்ளார். குடியரசின் தலைவராக அவரது இருப்பு வரலாற்று சிறப்புமிக்கது. நாட்டின் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஊக்கமளிக்கிறது" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு, ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 187 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் 111 பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பொருளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட்டை அணிந்து பிரதமர் மோடி மாநிலங்களவைக்கு சென்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற நோக்கி ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி பேரணியாக செல்ல முயற்சித்தார்.
ஆனால், காவல்துறை அதை தடுத்து நிறுத்தியுள்ளது.
நாட்டில் வெறுப்புணர்வை பரப்புபவர்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் அமைதி சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று மதியம் 3 மணிக்கு பங்கேற்று பிரதமர் மோடி பதில் அளிக்கிறார்.
தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்துக்கு எப்போது ஒப்புதல் அளிக்கப்படும் என தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆன்லைன் விளையாட்டு மற்றும் சூதாட்டத்தை ஒழுங்கப்படுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானி ஆகியோர் குறித்து பேசியுள்ள ராகுல் காந்தியின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் தங்கள் நாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் அதிக உற்சாகமாகி உணர்ச்சிவசப்பட்டு பேச வேண்டாம் என்றும் பாஜக எம்பி ஹேமமாலினி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு பதில் அளிக்கிறார் பிரதமர் மோடி.
நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது பேசிய எதிர்கட்சி உறுப்பினர்கள், அதானி விவகாரத்தை முன்வைத்து மத்திய அரசிடம் நேற்று சரமாரி கேள்வி எழுப்பியிருந்தனர்.
ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் பாஜக எம்.பி.நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீஸ் - உறுதிப்படுத்தப்படாத, அவதூறு கருத்துகளை கூறியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதிலளிக்க்கிறார்
Background
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதம் சுமூகமாக நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது.இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி 2023 -2024 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் விவாதத்தில் அதானி குழும விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அவையை நடத்த விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மூன்று வேலை நாட்களிலும் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் முடங்கிய நிலையில், 4வது நாளான நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள் அதானி குழும பிரச்சினையை எழுப்ப முயன்றன. அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்தார். ஆனால் எதிர்கட்சிகள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியதால் மதியம் 12 மணி வரை சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் ஆம் ஆத்மி தவிர பிற கட்சிகள் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர். மக்களவையில் பேசிய ராகுல்காந்தி,
ஒன்றிய அரசின் கொள்கைகளால் நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து துறைகளிலும் அதானி புகுந்து விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தற்போது நாடு முழுவதும் அதானி விவகாரம் குறித்து பேசப்படுகிறது. மேலும், தனது ஒற்றுமை பயணத்தின் போது குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரது கருத்துக்களையும் காது கொடுத்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என ராகுல்காந்தி கேள்வியெழுப்பினார்.
ஒற்றுமை நடைபயணத்தின் போது மக்களின் ஆழமான கருத்துக்களை கேட்க முடிந்தது. மேலும், ஒற்றுமை பயணத்தின் போது என்னிடம் பேசிய பலர் நாட்டின் பணவீக்கம் குறித்தும், வேலையின்மை குறித்து பேசினர். அக்னி வீர் திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் திட்டம் என மக்கள் அஞ்சுகின்றனர். அதானி இத்தனை சொத்துக்களை சேர்க்க யார் உதவியது? ஒரு சில ஆண்டுகளிலேயே அதானி சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது எப்படி? விமான நிலையங்களை அமைக்கும் திட்டங்களை ஏன் அதானியிடம் மத்திய அரசு திணித்து கொடுக்கிறது எனவும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.
இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் எவ்வித இடையூறுமின்றி நடைபெறும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -