பத்திரப் பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும்: 



ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும். பத்திரப் பதிவு கட்டணங்களை மாநில அரசுகள் குறைக்க வேண்டும். அதிக பத்திரப் பதிவு கட்டணங்கள் வசூலிக்கும் மாநிலங்கள் கட்டணங்களைக் குறைப்பதற்கு ஊக்குவிக்கப்படும். மேலும் பெண்கள் வாங்கும் சொத்துகளுக்குக் கூடுதல் கட்டணக் குறைப்பு திட்டங்களும் வகுக்கப்படும் என்று இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

கடந்த ஆண்டு நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க  பதிவு கட்டணத்தை 4 சதவிகிதத்தில் இருந்து 2 சதவிகிதமாக தமிழக அரசு குறைத்தது.  இது எளிய நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கிக்கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் அதில் சாதக பாதகங்கள் இருப்பதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் பதிவு கட்டணத்தை குறைக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெண்கள் வாங்கும் சொத்துக்களுக்கு கூடுதல் கட்டண குறைப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது..

பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி


பெண்கள், ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் தொகை வரம்பை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த முடிவு. பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு பணிபுரியும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

கல்விக் கடன் 10 லட்சம் வரை வழங்கப்படும்.