2023-2024ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து அரசியல் தலைவர்களின் கருத்துகளை நாம் காணலாம். 


நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் 2023-2024ம் ஆண்டிற்கான பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார்.


இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட் இதுவாகும்.  நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது. கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதனிடையே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அதில் இடம் பெற்ற அறிவிப்புகள், வாக்குறுதிகள், கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும்  இந்தியாவின் நடுத்தர வர்க்கம் பணவீக்கம், மற்றும் வறுமையை எதிர்கொண்டபோது தேவையற்றவையாக மாறிவிட்டன. அதேபோல் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் பெரிய வித்தியாசம் இல்லை. எந்த அரசாங்கமும் கடந்த வருடத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் புதிய வாக்குறுதிகளை அளிப்பதில்லை. அதே சமயம் நில யதார்த்தத்தில் 100 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்வு முன்பு இருந்தது போல் ஆபத்தில் உள்ளது. மக்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள்.


அரசாங்கத்தின் குறுகிய கொள்கைகளும் தவறான சிந்தனைகளும் கோடிக்கணக்கான ஏழை விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. சாமானியர்களின் பாக்கெட் நிரம்பவும், நாடு வளர்ச்சியடையவும் அவர்களின் சுயமரியாதையிலும், தன்னம்பிக்கையிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.கட்சிக்கான பட்ஜெட்டை விட நாட்டுக்கான பட்ஜெட்டாக இருந்தால் நல்லது” என தெரிவித்துள்ளார்.


சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பதிவில், “பாஜக தனது பட்ஜெட்டின் தசாப்தத்தை நிறைவு செய்கிறது, ஆனால் முன்பு பொதுமக்களுக்கு எதுவும் கொடுக்காதபோது, ​​​​அது இப்போது என்ன கொடுக்கும். அதிகரிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழில் வல்லுநர்கள், வணிக வர்க்கம், இது நம்பிக்கையை அதிகரிக்கவில்லை, ஆனால் விரக்தியை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இது ஒரு சில பெரிய நபர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்” என விமர்சித்துள்ளார்.


உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மக்கள் நலன் சார்ந்த யூனியன் பட்ஜெட் 2023-24. பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! தற்போதைய மத்திய பட்ஜெட் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் எதிர்பார்ப்புகளையும், ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றப் போகிறது. இந்தியாவை பொருளாதார வல்லரசாக மாற்றும் திசையில் இந்த பட்ஜெட் ஒரு மைல் கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், பட்ஜெட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறதா என்பதுதான் உண்மையான பிரச்சனை. பட்ஜெட்டில் கடந்தகால வாக்குறுதிகளை நாம் ஆராய வேண்டும். அவை எந்த அளவு நிறைவேறியது? .. விவசாயிகளுக்கு அரசு பல திட்டங்களை அறிவித்தும், எதையும் நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசின் சாதனை மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் தேர்தல் அறிக்கை போல பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கலாம் என கடுமையாக சாடினார்.