Gold Rate Hike : பட்ஜெட் தாக்கல் எதிரொலி.. டக்கென்று உயர்ந்து மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வெள்ளி விலையும் உயர்வு!

தங்கக் கட்டிகளில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டதால் தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்தது. 

Continues below advertisement

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ரூ. 43,320 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு தங்கம் விலையானது ரூ.55 உயர்ந்து ரூ5,415க்கு விற்கப்படுகிறது. 

Continues below advertisement

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ1.20 உயர்ந்து ரூ.76க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கக் கட்டிகளில் இருந்து செய்யப்படும் ஆபரணங்களுக்கு சுங்கவரி உயர்த்தப்பட்டதால தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்தது. 

இன்று மட்டும் கிராமுக்கு ரூ77 உயர்வு:

தங்கத்தின் விலையானது காலையில் கிராமுக்கு ரூ22 எனவும், மதியம் கிராமுக்கு ரூ.55 எனவும் இன்று மட்டும் தங்கம் விலை ரூ77 உயர்ந்துள்ளது. 

பட்ஜெட் தாக்கல் 2023:

இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை இன்று வெளியிட்டார். இந்தியாவின் கடந்த கால பொருளாதார வளர்ச்சிகளுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசி வரும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். அதே நேரம் வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வளவு உயர்வு?

குறிப்பாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரியானது குறைக்கப்பட வேண்டும் என் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வந்தது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மீதான வரி குறையுமா, சாமானிய மக்களும் தங்கத்தினை வாங்க முடியுமா  என்று மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. 

பலத்த எதிர்பார்ப்புகள் மத்தியில் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, 2023ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தங்கம், வெள்ளி பொருட்களுக்கான சுங்க வரி 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வைரங்கள் மீதான இறக்குமதி வரி, குறைக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளியின் வரி குறைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிந்தது. இதுபோன்ற வரி குறைத்தால், தங்கம், வெள்ளி விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதற்கு எதிராக தங்கம், வெள்ளி, பிளாட்டின் ஆகியவற்றிருக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் வரும் காலங்களில் தங்கம், வெள்ளி விலை உயர்வும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது அதற்கான வரி உயர்த்தி இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola