வெளிநாடுகளுக்கு, இந்தியா அளிக்கும் உதவி தொகையானது, வரும் நிதியாண்டில் குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறிப்பில் தெரிவித்துள்ளார்.


வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து, வெளிநாடுகளுக்கான உதவித் தொகையை மத்திய அரசு குறைக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


பட்ஜெட்:


நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 


கூட்டத்தொடரின் முதல் அமர்வு 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.




இந்நிலையில் வெளிநாடுகளுக்கு, இந்தியா வழங்கவுள்ள நிதி உதவி குறித்த தகவலை தெரிந்து கொள்வோம்.


2023-2024 மத்திய பட்ஜெட்டில், வெளிநாடுகளுக்கான மொத்த உதவித்தொகையானது 2022-2023 பட்ஜெட்டில் ரூ .6292.30 கோடியிலிருந்து இந்த ஆண்டு ரூ .5408.37 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.


நிதி உதவி குறைப்பு:


பூடான்  நாட்டிற்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.2400.58 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.2266.24 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.


வங்கதேசத்துக்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.300 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.200கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.


நேபாளத்துக்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.750 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.550 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.200 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.150 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.


மியான்மருக்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.600 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.400 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.


மங்கோலியாவுக்கு 2022-23 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ரூ.7 கோடியிலிருந்து  2023-24 பட்ஜெட்டில் ரூ.1 கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.


ஆப்கானிஸ்தான் (ரூ.200 கோடி), ஆப்பிரிக்க நாடுகள் (ரூ.250 கோடி), பிற வளரும் நாடுகள் (ரூ.150 கோடி) உள்ளிட்ட பிற நாடுகளின் பட்ஜெட் கடந்த ஆண்டைப் போலவே உள்ளது.


2023-2024 மத்திய பட்ஜெட்டில், பூட்டானுக்கு அதிகபட்சமாக ரூ .2400 கோடியும், மங்கோலியாவுக்கு குறைந்தபட்சமாக ரூ .7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.