இந்திய நாட்டின் 2023 - 24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வேளாண்துறையில் கடன் வழங்க 20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
Budget 2023: இந்த ஆட்சியின் கடைசி முழுநேர பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நாட்டின் வரவு செலவு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் ஆண்டுக்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்வார். இதுவே, மத்திய பட்ஜெட் என அழைக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டுக்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று (31ஆம் தேதி) தொடங்கியது. நாடாளுமன்றத்தின் மரபுப்படி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். இந்த உரை முடிந்ததும் பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி) 2023 - 24ஆம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
கூட்டத்தொடரின் முதல் அமர்வு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாவது அமர்வானது மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்திய நாட்டின் வேளான்துறை சார்ந்து பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
விவசாய வளர்ச்சியை அதிகரிக்க ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேளாண் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உற்பத்துக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் முதுகெலுமபான விவசாய துறையை ஊக்குவிக்க வேளாண்துறை மூலம் 20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாய ஊக்குவிக்க நிதி வழங்கப்படும் என்றும், புது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு முயற்சிகள் கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி அதிகரித்து அதிக லாபம் ஈட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
பருத்தி உற்பத்தியை அதிகரிக்க அரசு தனியார் கூட்டு பங்களிப்பு (public private patnership) உருவாக்கப்படும். இது விவசாயிகள், மாநில அரசு மற்றும் நிறுவனங்களுக்கு இடையே ஒரு இணைப்பு இருக்கும். Clean Plant Program என்ற திட்டத்தின் மூலம் ரசாயனம் இல்லாத விவசாய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் பிரதமரின் கிசான் திட்டத்தில் 11.4 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் உலக அளவில் இந்திய முதலிடம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பலவகை தானியங்களை உற்பத்தி செய்து வருகிறோம், மேலும் இவை அனைத்தும் நமது பாரம்பரிய உணவு வகைகளாகும். Indian Institute of Millet Research, ஹைதரபாத் உலக அளவில் சிறுதானிய உற்பத்தி பற்றி எடுத்து சென்று அதன் தொழிநுட்பங்களை பகிர்ந்ததற்காக பாராட்டுகளை தெரிவித்தார்.
கரும்பு விவசயிகள் நிலுவைத்தொகையை பெற ஏதுவாக, கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 10,000 கோடி வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.