இந்தியாவின் 2022-2023ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால், திங்கட்கிழமையான நேற்றே பங்குச்சந்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று நல்ல உச்சம் அடைந்தது. இந்த நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளான இன்று சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்துள்ளது, நிப்டியும் உயர்ந்து காணப்பட்டுள்ளது.





இன்று காலை நிலவரப்படி பங்குச்சந்தையான சென்செக்ஸ் 708.18 புள்ளிகள் அதிகரித்து அதாவது நேற்றை காட்டிலும் 1.22 சதவீதம் அதிகரித்து 58 ஆயிரத்து 722 ஆக புள்ளிகள் அதிகரித்துள்ளது. நிப்டி 1.16 சதவீதம் அதிகரித்து 200.75 புள்ளிகளாக உயர்ந்து 17 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. பட்ஜெட் தாக்குதலை முன்னிட்ட சன்பார்மா நிறுவனத்தின் புள்ளிகள் 4.79 சதவீதம் அதிகரித்துள்ளது.  


மும்பை பங்குச்சந்தையை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் மூன்று நிறுவனங்கள் தவிர்த்து ஏனைய அனைத்து நிறுவனப் பங்குகளில் விலையும் மிகவும் ஏற்றத்துடன் நிறைவு பெற்றன. குறிப்பாக, டெக் மஹிந்திரா பங்கின் விலை 4.88 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்துள்ளது.




மும்பை பங்குச்சந்தையில் உலோகம் தவிர்த்து அனைத்து துறையைச் சேர்ந்த குறியீடுகளும் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ரியல் எஸ்டேட், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், எரிசக்தி, மோட்டார் வாகன துறையைச் சேர்ந்த குறியீட்டெண்கள் அதிகபட்ச ஏற்றம் கண்டுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண