புதுச்சேரி: பி.எஸ்.என்.எல்., BSNL வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (1ம் தேதி) மேளா விற்பனை முகாம், புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியில் உள்ள BSNL பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிரே நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி BSNL துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பில்.,
BSNL பி.எஸ்.என்.எல்., நிறுவனம் துவங்கி, 25 ஆண்டுகள் நிறைவு பெற்று வெள்ளி விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று 1ம் தேதி பி.எஸ்.என். எல்., நிறுவனம் மேளா சிறப்பு விற்பனை முகாம், புதுச்சேரி ரங்கபிள்ளை வீதியில் உள்ள பி.எஸ். என்.எல்., நிறுவன வளாகம் எதிரே நடைபெற்று வருகிறது.
பி.எஸ்.என்.எல்., புதிய வாடிக்கையாளர்க ளுக்கு சிறப்பு சலுகையாக ரூ.289 மதிப்புள்ள புதிய சிம் கார்டு ரூ.100க்கு வழங்கப்படும். இதில், 45 நாட்களுக்கு தினசரி 2 GB டேட்டா 100 SMS மற்றும் அள வில்லாமல் அழைப்புகள் இலவசம். புதிய 4G சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் 4GB இலவச டேட்டாவை பெறலாம்.
225 பிளான் எஸ்.டி.வி., அறிமுகம் செய்து, 30 நாட்களுக்கு தினமும் ஒரு நாளைக்கு 2.5 GB டேட்டா மற் றும் 100 SMS மற்றும் அளவில்லா அழைப்புகள் பெற்றுக் கொள்ளலாம். மொபைல் வாடிக்கையாளர்கள் தற்போது பி.ஐ.டி.வி., சேவையை பெறலாம். அதோடு OTT பிளே சேவைகளும் இணைந்து வழங்கப்ப டுகின்றன. பி.எஸ்.என். எல்., எப்.டி.டி ஹெச்., மூலம் 30 எம்.பி.பி.எஸ்., முதல் 300 எம்.பி.பீ. எஸ்., வரை வேகத்துடன் அன்லிமிடெட் டேட்டா மற்றும் தொலைபேசி சேவைகள் வழங்கப்படுகிறது. ஸ்கைப்புரோ ஐ.பி. டி.வி., பிளஸ் மூலம் ஐ.எப்.டி.வி., பிரிமியம் பேக் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது . எப்.டி.டி ஹெச்., திட்டம் ஒ.டி.டி., சேவைகளுடன் விடியோ ஸ்ட்ரீமிங், 1000+ சேனல் கள், ஹெச்.டி., திரைப் படங்கள், ஆன்லைன் கல்வி போன்ற சேவை களை வழங்குகிறது. புதிய பி.எஸ்.என். எல்., செல்ப்கேர் செயலி யில் மொபைல், லேண்ட் லைன் மற்றும் எப்.டி.டி ஹெச்., சேவைகள் எளி தாக நிர்வகிக்க முடியும். செல்ப்கேர் செயலியில் தனிப்பயன் டாஷ் போர்டு, ரீசார்ஜ்& பில்லிங், டி.என்.டி. நிர்வாகம் மற் றும் புகார் பதிவு போன்ற அம்சங்கள் உள்ளன.
மொபைல் வாடிக்கை யாளர்கள் 18004444 என்ற வாட்ஸ் ஆப் எண் ணில் 'HI' என அனுப்பி, கணக்கு விவரங்கள், பில்லிங், ரீசார்ஜ், புதிய திட்டங்கள், எப்.டி.டி ஹெச்., 4ஜி சேவைகள் மற்றும் புகார் உதவி களை பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.