மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விலை குறைவாகவும் தரமான பூக்களும் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆர்வமுடன் அதிக அளவிற்கான பூக்களை வாங்கி செல்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தை
ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் வருகை தருகின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப்பூ கிலோ 700 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ 700 ரூபாய்க்கும், செவ்வந்தி 150 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 150 ரூபாய்க்கும், அரளி கிலோ 400 ரூபாய்க்கும், பட்ரோஸ் கிலோ 200 ரூபாய்க்கும் என குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
* மல்லிகை பூ கிலோ -700 முதல் 800 ரூபாய்
* முல்லை பூ கிலோ - 700 ரூபாய்
* செவ்வந்தி கிலோ - 150 ரூபாய்
* சம்பங்கி கிலோ - 150 ரூபாய்
* அரளி கிலோ - 400 ரூபாய்
* பட்டன் ரோஸ் கிலோ -200 ரூபாய்
* துளசி கிலோ - 40 ரூபாய்
அதிக அளவிற்கான பூக்களை வாங்கி செல்கின்றனர்
வரத்து குறைவாக இருந்தாலும், விற்பனை குறைவாக இருப்பதன் காரணமாக பூக்களின் விலையானது கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்பு மிகவும் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். இதே நேரத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் விலை குறைவாகவும் தரமான பூக்களும் கிடைப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆர்வமுடன் அதிக அளவிற்கான பூக்களை வாங்கி செல்கின்றனர்.