இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் சேவை வழங்கும் நிறுவனமும், டாய்ச்போஸ்ட் டி.எச்.எல். குழுமத்தின் (DPDHL) அங்கமுமாக திகழ்வது ப்ளூடார்ட்.  ப்ளூடார்ட் நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்காக "ராக்கி எக்ஸ்பிரஸ்" என்ற ஆஃபரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் தனது குழுமத்தின் ‘மக்களை இணைத்தல், வாழ்க்கைகளை மேம்படுத்துதல்’ என்ற நம்பிக்கையை ப்ளூடார்ட் முன்னெடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த சலுகை மூலம் தனிநபர்களை உலகெங்கிலும் உள்ள அவர்களின் அன்பிற்கும், நேசத்திற்குமுரியவர்களுடன் இணைக்கச் செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதே சமயத்தில், ஒவ்வொரு இந்திய குடிமக்களையும் பாதுகாப்பதற்கு தொடர்ந்து பணியாற்றிவரும் நாட்டின் கோவிட்-19 போராளிகளை போற்றுவதையும் மற்றும் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.


ராக்கி ஷிப்மென்ட் அனுப்பக்கூடிய அல்லது பெறக்கூடிய அனைத்து கோவிட்-19 போராளிகளுக்கும் ரூ. 200 என்ற ஒரு விசேஷ தள்ளுபடி செய்யப்பட்ட விலையை இந்த சலுகை மூலம் ப்ளூடார்ட் நிறுவனம் வழங்குகிறது. தங்கள் ராக்கி ஷிப்மென்ட்களை உள்நாட்டில் உள்ள அவர்களுடைய உடன்பிறப்புகளுக்கு மற்றும் அவர்களின் அன்பிற்கும் நேசத்திற்குமுரியவர்களுக்கு அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு 0.5 கி.கி. வரை எடையுள்ள ஷிப்மென்ட்களுக்கு ரூ. 250 என்ற ஒரு விசேஷ தள்ளுபடி செய்யப்பட்ட விலை வழங்கப்படுகின்றன.




அன்பிற்கும், நேசத்திற்கும் உரியவர்கள் சில சமயங்களில் வெளிநாடுகளில் வசிக்கக்கூடும் என்பதை ப்ளூ டார்ட் புரிந்துகொண்டிருக்கிறது. எனவே, அனைத்து ராக்கி ஷிப்மென்ட்களுக்கும், 0.5 கி.கி. முதல் 2.5 கிகி, 5 கிகி, 10 கிகி, 15 கிகி மற்றும் 20 கிகி ஆகியவற்றிற்கிடையே எடையுள்ள ஷிப்மென்ட்களுக்கு அடிப்படை சரக்கு மீது 50% வரை தள்ளுபடியை வாடிக்கையாளர்கள் உறுதியான நேர விரைவு டெலிவரியுடன் கிடைக்கப்பெறலாம். இந்த சலுகையானது வரும் 23-ந் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றும் ப்ளூடார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.




இந்த எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் வழங்கு நிறுவனமானது, பிரத்யேகமாக உள்நாட்டு ராக்கி ஷிப்மென்ட்கள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு என தனது அவுட்லெட்களில் ஒரு உற்சாகமான ‘வாசக போட்டியையும்’ (Slogan Contest) நடத்த திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், ஒரு படிவத்தை பூர்த்திசெய்து “எங்கள் குடும்பம் ப்ளூ டார்ட்-ன் ராக்கி எக்ஸ்பிரஸ்-ஐ ஏன் விரும்புகிறது என்றால்...” என்பதற்கான காரணத்தை சொல்லி பூர்த்தி செய்ய வேண்டும். இவற்றில் மிகவும் 10 புதுமையான பதில்களுக்கு விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் வழங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.