வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு ரூ.71 கோடி மதிப்பிலான ஈக்விட்டி.. ஏர்டெல் ஒதுக்கீடு
கடந்த 2020 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வெளிநாட்டு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு சுமார் ரூ.71 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் குழுமம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.


1 பில்லியன் அமெரிக்க டாலர் 1.5 சதவீத வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களை (FCCBs) வெளியிட்டது. அதற்கான காலக்கெடு (Due) 2025 உடன் முடிகிறது.


சில வெளிநாட்டு நாணய மாற்றத்தக்க பத்திரங்களை (FCCB) வைத்திருப்பவர்களிடமிருந்து 8,600,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள FCCB களை மாற்றுவதற்கான அறிவிப்பைப் பெற்றவுடன், நிதி திரட்டலுக்கான சிறப்பு இயக்குநர்கள் குழு டிசம்பர் 09, 2022 அன்று 1,188,917 முழுமையாக செலுத்தப்பட்ட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பதைச் சமர்ப்பிக்க விரும்புகிறோம். FCCB-களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ. 521 என மாற்றும் விலையில் ரூ. 5 முக மதிப்புள்ள பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்த ஒதுக்கீட்டின் மூலம், சிங்கப்பூர் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட்டில் பட்டியலிடப்பட்டுள்ள FCCBகளின் நிலுவையிலுள்ள அசல் மதிப்பு 991.20 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Gold, Silver Price Today: தொடர்ந்து உயரும் தங்கம் விலை...! நகைக்கடைக்கு போகலாமா..? வேண்டாமா..?


முன்னதாக, நேற்று காலை தொடங்கிய இந்திய பங்குச்சந்தையானது ஏற்றத்தில் தொடங்கியது.
நேற்று காலை தொடங்கிய பங்கு சந்தையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,115.09 புள்ளிகள் உயர்ந்து 62,685.77 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 33.25 புள்ளிகள் உயர்ந்து 18,642.60 புள்ளிகளாக இருந்தது.