ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பண்டிகை கால மாதமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தீபாவளி, ஆயுத பூஜை என சிறப்பான பல பண்டிகைகள் வர இருக்கிறது. இந்தநிலையில், அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்ற முழு பட்டியலை கீழே காணலாம்.
அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல்:
- அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி (ஞாயிறு)
- அக்டோபர் 4 - மஹா நவமி (செவ்வாய்)
- அக்டோபர் 5 - விஜயதசமி (புதன்)
- அக்டோபர் 8 - இரண்டாவது சனிக்கிழமை (சனி)
- அக்டோபர் 9 - ஈத்-இ-மிலாத் (ஞாயிறு)
- அக்டோபர் 22 - நான்காவது சனிக்கிழமை (சனி)
- அக்டோபர் 24 - தீபாவளி (திங்கள்)
மேற்கண்ட நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் மூடப்படும். இந்த நாட்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படாது. எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விடுமுறை நாட்களை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது. அவை, பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை, பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை மற்றும் நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை, வங்கி கணக்கு மூடல் ஆகியவை ஆகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) விடுமுறை காலண்டரின் படி, கடந்த செப்டம்பர் 2022 வங்கிகளுக்கு மொத்தம் 8 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.