2023 ஆம் ஆண்டும் மார்ச் மாதத்தில், மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, வங்கி தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படாமல் இருக்க அனைவரும் தங்கள் வங்கி தொடர்பான பணிகளை திட்டமிட்டு கொள்ளுங்கள்.
வங்கி விடுமுறை:
வழக்கமாக, இந்தியாவில் உள்ள வங்கிகள் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகக் கருதப்படுகின்றன. மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் தொடர்ந்து செயல்படுகின்றன.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், வங்கி விடுமுறை காரணமாக தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூடப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.
மேலும் விடுமுறையானது மாநிலத்தை பொறுத்து மாறுபடுகிறது.
மார்ச் 2023 வங்கி விடுமுறைகளின் முழு பட்டியல்:
மார்ச் 3 சாப்சார் குட்
மார்ச் 5 ஞாயிறு
மார்ச் 7 ஹோலி
மார்ச் 8 ஹோலி
மார்ச் 9 ஹோலி
மார்ச் 11 மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 12 ஞாயிறு
மார்ச் 19 ஞாயிறு
மார்ச் 22 தெலுங்கு புத்தாண்டு தினம்
மார்ச் 25 நான்காவது சனிக்கிழமை
மார்ச் 26 ஞாயிறு
மார்ச் 30 ஸ்ரீராம நவமி
மார்ச் மாதத்தில் 5,12,19,26 ஆகிய தேதிகளில் நான்கு ஞாயிற்றுக் கிழமைகளும், மார்ச் 11, 25 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் உள்ளதால் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தை பொறுத்து விடுமுறை:
மார்ச் 3 ஆம் தேதி சாப்சார் குட்- மிசோரம் மாநிலத்தில் விடுமுறை
மார்ச் 7,8,9 ஆம் தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு, விடுமுறை ( மாநிலத்தை பொறுத்து மாறுபடும், மாநில அரசின் அறிவிப்பை பொறுத்து )
மார்ச் 22 ஆம் தேதி தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு விடுமுறை
மார்ச் 30 ஸ்ரீராம நவமி - ( மாநிலத்தை பொறுத்து மாறுபடும், மாநில அரசின் அறிவிப்பை பொறுத்து )
ஏ.டி.எம்., பணம் டெபாசிட், ஆன்லைன் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்பதால், வங்கி விடுமுறை நாட்களிலும், வங்கி சேவை தொடர்பான பிரச்னை ஏற்படாது.
Also Read: VRRR auction: ரூ.50,000 கோடி ரூபாய்… மாறக்கூடிய விகித ரிவர்ஸ் ரெப்போ ஏலம்; இன்று நடத்துகிறது ஆர்பிஐ!