மாதந்தோறும் வங்கி விடுமுறை பற்றிய அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், செப்டம்பர் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை என்று தெரியுமா? ஒவ்வொரு மாதமும் தொடங்கும் போது வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவிக்கும். அந்த வகையில் இந்த மாதத்துக்கான விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுவாக செப்டம்பர் மாதம் இந்தியாவில் இந்துக்கள் பண்டிகை நிறைய வரும். விநாயகர் சதுர்த்தி தான் முதல் விஷேஷம். அதனைத் தொடர்ந்து பல்வேறு பண்டிகை நாட்களும் வரும். அதன்படி இந்த மாதம் 12 நாட்களை விடுமுறை நாட்கள் எனப் பட்டியலிட்டு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதில் 7 நாட்கள் கட்டாய விடுமுறை நாட்கள்.
இதில் சில விடுமுறை நாட்கள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். அதற்கு உதாரணம் இன்று கொண்டாடப்படும் ஜன்மாஷ்டமியும், நாளை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தியும்.
இன்று சில மாநிலங்களில் ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது. அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷிலாங்க், சிம்லா, ஸ்ரீநகர், கேங்டாக் ஆகிய நகரங்களில் இன்று வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹைதராபாத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் நாளை (ஆகஸ்ட் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் 8 ஆம் தேதி அசாம் மாநில குவஹாத்தியில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை இருக்கும் நிலையில் முதல் விடுமுறை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 10, 11 தேதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர், பனாஜி நகரங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விடுமுறை நாட்கள் பட்டியல் | Bank Holidays in September:
செப்டம்பர் 5: ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 8: ஸ்ரீமந்தா சங்கரதேவா
செப்டம்பர் 9: தீஸ்
செப்டம்பர் 10: விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் 11: இரண்டாவது சனிக்கிழமை
செப்டம்பர் 12: ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 17: கர்மா பூஜா (ராஞ்சி)
செப்டம்பர் 19: ஞாயிற்றுக்கிழமை
செப்டம்பர் 20: இந்திரஜத்ரா
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதினி தினம்
செப்டம்பர் 25: 4வது சனிக்கிழமை
செப்டம்பர் 26: ஞாயிற்றுக்கிழமை
செம்படம்பர் மாதத்தில் இந்த 12 நாட்கள் தான் விடுமுறை நாட்கள். இவற்றில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினம், செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியைத் தவிர மற்ற விடுமுறை நாட்கள் பெரும்பாலும் உள்ளூர் விடுமுறையாகவே அமையும்.