கனரா வங்கியுடன் இணைக்கப்பட்ட சிண்டிகேட் வங்கியின் ISFC கோடு, செக் புக் போன்றவற்றை ஜூன் 30 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்யாவிடில் இனி எந்த சேவைகளையும் இதன் மூலம் பெற முடியாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தியாவில் செயல்படும் சிறிய வங்கிகள் அனைத்தும் திவாலாகாமல் தடுக்கும் விதமாக ஒரு புதிய திட்டத்தினை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் படி, தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேசன் வங்கி, ஆந்திரா வங்கி, சிண்டிகேட், ஓரியண்டல், யுனைடெட் பேங்ஆப் இந்தியா, மற்றும் அலகாபாத் ஆகிய வங்கிகள் அனைத்தும் பெரு வங்கிகளுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த சில மாதங்களாக அதற்கான நடவடிக்கைகளை வங்கிகள்  மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் தான் இந்தியாவில் பெரு வங்கிகளுடன் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் அவர்களது சேவைகளை  ஏற்கனவே உள்ள IFSC கோடுகள் போன்றவற்றைப்பயன்படுத்தி ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து பெற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதன் படி , ஏற்கனவே வேறு வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்கள் புதிய வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண், எம்.ஐ.சி.ஆர் குறியீடு, கிளை முகவரி, வங்கி பாஸ் ஆகியவற்றினைக்கொண்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சிண்டிகேட் வங்கி மற்றும் கனரா வங்கியில் தற்போதுள்ள செக் புக் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்த நடைமுறை அமலுக்கு வர இன்று ஒரு நாளே உள்ள நிலையில், சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள், எப்படி புதிய  IFSC கோடினைப்பெறுவது, எங்கே சென்று செக் புக் போன்றவற்றை பெறுவது குறித்து கனரா வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


புதிய IFSC Code னை பெறும் வழிமுறைகள் என்ன?





சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டதையடுத்து புதிய IFSC Code னை சிண்டிகேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் மாற்ற வேண்டும். SYNB என்பதனை CNRB என மாற்ற வேண்டும். இல்லாவிடில் ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து எந்தவிதப் பணபரிவர்த்தனைகளையும் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியாது. எனவே  இதனை மிக எளிய முறையில் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளலாம்.


அதன்படி முதலில் www.canarabank.com என்ற இணைய முகவரியினைப் பயன்படுத்தி கனரா வங்கியின் இணையப்பக்கத்திற்கு செல்ல வேண்டும். இதனையடுத்து What’s new என்பதனை கிளிக் செய்ய வேண்டும்.


அதில் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர் கவனத்திற்கு (kind attention syndicate customers) என்பதில் know your new IFSC code என்பதினை கிளிக் செய்து அங்கே கேட்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கு பதில் அளித்தால் நாம் புதிய IFSC Code பெற்று விட முடியும்.


வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு புதிய IFSC Code எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். மேலும் வங்கிக்கு நேரடியாக சென்று கூட நாம் பெற்றுக்காள்ளமுடியும்.


வாடிக்கையாளர் சேவை 18004250018 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் நமக்கு தேவையான விவரங்களைப்பெற்றுக்கொள்ள முடியும்.


குறிப்பாக இந்த புதிய IFSC Code போன்றவற்றினை  ஜூன் 30 ஆம் தேதிக்குள் மாற்றம் செய்ய தவறும் பட்சத்தில், வங்கிகளின் எந்த சேவையினையும் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.