ஆதார் துறையில் காலியாக  Assistant Manager பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என UIDAI அறிவித்துள்ளது.


 ஆதார் அடையாள அட்டை என்பது மக்களின் தவிர்க்க முடியாத ஆவணங்களில் ஒன்றாகிவிட்டது.. குறிப்பாக இந்த டிஜிட்டல் இந்தியாவில், ஒருவர் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும்  பெற வேண்டும் என்றாலும் ஆதார் எண் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. வங்கிகளில் சேவைகளைப் பெற வேண்டும் என்றால் 12 இலக்க ஆதார் எண் இணைப்பு அவசியமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகைக்கொண்ட நாடான இந்தியாவில் மக்கள் அனைவருக்கும் தனித்தனியாக 12 இலக்க  அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் எண்ணின் முதல் நோக்கமாக உள்ளது.






 தற்பொழுது ஆதார் அடையாள அட்டையில் முகவரி மாற்றுவது, பெயர் திருத்தம், மொபைல் எண்களைச் சேர்ப்பது, பிறந்தத் தேதியினை இணைப்பது போன்ற பல்வேறு மாற்றங்களை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் இணையதளங்களில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் வகையில் அதனைச் சரிசெய்வதற்காக தற்போது மென் பொருள் துறையின் கீழ் பணிபுரிந்த நபர்கள் தற்பொழுது Assistant Manager என்ற பதவியில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை UIDAI வெளியிட்டுள்ளது. அதன்படி, 
BE/  B Tech/ MCA/ BCA/ BBA/ BSC/ (computers) முடித்தவர்கள் ஆன்லைன் மூலம்  Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வித்தகுதியினை பெற்றிருப்பவர்கள் 50 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆதார் துறையில் Assistant Manager பணிக்காக அனுபவம்:


ஆதார் துறையின் கீழ், Assistant Manager இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐடி மென்பொருள், Hardware platform support, மென்பொருள் பயன்பாடுகள், Web development, and user support ஆகியப் பிரிவுகளின் கீழ் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும். அதோடு அரசின் இ சேவை மற்றும் நிதித்சேவைத்தொழில் திட்டங்களில் அமலாக்க ஆதரவு பிரிவுகளில் அனுபவம் இருந்தால் கூடுதல் நன்மை என வேலை வாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  முழுவதும் இ-சேவை மற்றும் மென்பொருள் மூலம் இயங்கக்கூடிய ஆதார் மையத்தில் எந்தவொரு பிரச்சனை மற்றும் சிக்கல் வந்தால் அதனை எளிதில் சரிசெய்வதற்கு வசதியாக Java , web service , RDBMS an advantage ஆகிய software குறித்து அறிந்திருக்கவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்களுக்கு தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 60- 70 சதவீதம் வரை கிராமப்புறங்களுக்கு சென்று பணிபுரிய நேரிடும் என்பது போன்ற நிபந்தனைகள் இந்த  வேலை வாய்ப்பு அறிவிப்பில் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பிற்கான கூடுதல் விபரங்களை http://careers.nisg.org/job-listings-assistant-manager-uidai-mumbai-nisg-national-institute-for-smart-government-mumbai-2-to-7-years-230621002692 தெரிந்துக்கொள்ளலாம்.