சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக உள்ள ஆனந்த் மஹிந்த்ரா முன்னதாக லேட்டஸ்ட் தொழில்நுட்பம் குறித்து கிண்டலாகப் பகிர்ந்த பதிவு நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.


தனது சுவாராசியமான பல ட்வீட்களுக்காக பெயர் போனவர் மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா. 


இந்நிலையில், முன்னதாக இரண்டு பெண்கள் வழக்கம்போல் துணி காய வைக்கும்  கேலிச்சித்திரம் ஒன்றைப் பகிர்ந்து துணி உலர்த்த பயன்படுத்தப்படும் லேட்டஸ்ட் தொழில்நுட்பம் என கிண்டாலகப் பகிர்ந்துள்ளார்.


மேலும் அதில் சூரிய ஒளி, காற்று ஆற்றல் கொண்ட லேட்டஸ்ட் டெக்னாலஜி என அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஆனந்த் மஹிந்த்ரா தன் தொழில் போட்டியாளர் யாரையோ கலாய்க்கும் விதத்தில் இந்த பதிவை பகிர்ந்துள்ளார் என நெட்டிசன்கள் இந்தப் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.






முன்னதாக தமிழில் தான் கற்றுக்கொண்ட வார்த்தை பற்றி ஆனந்த் மஹிந்த்ரா பதிவிட்ட ட்வீட் வைரலானது.
”நான் பள்ளிக்கூடம் படித்ததெல்லாம் தமிழ்நாட்டில்தான். அதனால் இந்த ஒரு சொல்லைதான் நான் முதலில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு அடிக்கடி இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கிறேன். சில சமயம் உரக்கவும் சொல்லியிருக்கிறேன். சிலசமயம் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என ட்வீட் செய்திருந்தார். 






ஆங்கிலத்தில் நாம் சொல்ல வரும் பல வார்த்தையை தமிழில் மிக சிறப்பாக ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியும் என்பதைக் குறிப்பிட்டிருந்த அவர், ஆங்கிலத்தில் ‘உங்களது விளக்கத்தைக் கேட்கவோ அல்லது உங்கள் கருத்தை அறியவோ எனக்கு நேரமில்லை. அதனால் என்னை சற்று தனியே விடுங்கள்’ எனச் சொல்வதை தமிழில் ‘போடா டேய்!’ என முடித்துக் கொள்ளலாம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.






மேலும் கூடுதலாக தமிழில் நிறையவே கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொண்டதாகவும், அது தனக்கு கார் ஓட்டும்போது குறிப்பாக தனது தார் வண்டிக்கு குறுக்கே யாரேனும் சென்றால் திட்டுவதற்கு வசதியாக இருப்பதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.