அஜித் நடிப்பில், கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. அதன் பின்னர் இதுவரை எந்த படமும் வெளியாகாத நிலையில், தற்போது அஜித், மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி'  என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார்.


பொங்கல் ரிலீசாக வெளியாகும் விடாமுயற்சி:


கடந்த இரண்டு வருடமாக, முழுக்க முழுக்க அஜர்பைஜானின் படமாக்கப்பட்டு வந்த 'விடாமுயற்சி' திரைப்படம் ஒரு வழியாக படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, டப்பிங் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.  மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு,  பொங்கல் ரிலீசாக 'விடாமுயற்சி' திரைப்படம் வெளியாகும் என்பதை உறுதி செய்தது. எனவே அஜித் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'குட் பேட் அக்லீயின்' ரிலீஸ் தள்ளி போய் உள்ளது.




ஏற்கனவே 'குட் பேட் அக்லீ' தான், பொங்கல் ரிலீசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு விடாமுயற்சி வெளியாவதால் அஜித்தின் பிறந்தநாள் அல்லது வேறு ஏதேனும் தேதியில் இந்த படத்தை படக்குழு ரிலீஸ் செய்யலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இன்னும், ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், 'விடாமுயற்சி' அப்டேட் அவ்வப்போது வெளியாகி வருகிறது.


விடாமுயற்சி முதல் சிங்கிள் ரிலீஸ்:


அந்த வகையில்  டீசரை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. 'விடாமுயற்சி' திரைப்படத்தின்  முதல் சிங்கிள் பாடல், சத்தமே இல்லாமல் நாளைய தினம் வெளியிட படக்குழு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க ரெஜினா, அர்ஜுன், ஆரவ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் ரிலீசாக உள்ளது. அனிருத் இசை டீசரில் எடுபடாமல் போன நிலையில், முதல் சிங்கிள் பாடலிலாவது ரசிகர்களை ஆட்டம் போட வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.