குழந்தைகளாக இருக்கும்போது பலருக்கும் சாக்பீஸ் மற்றும் பென்சிலை சாப்பிடும் பழக்கம் இருந்திருக்கும். இது ஒரு வகையான உண்ணும் கோளாறு என்றும், இதற்கு பெயர் பிகா என்றும் மருத்துவ துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான, அமேசான் தங்களது தளத்தில் குழந்தைகளுக்கான சுண்ணாம்பால் ஆன ஸ்லேட்டு குச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த குச்சிகளுக்கு "படிப்பது அல்லது சாப்பிடும் ஸ்லேட் குச்சிகள்" என்று பெயரிட்டுள்ளனர்.
அமேசான் இவ்வாறு பெயரிட்டிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமேசானின் இந்த செயல் குழந்தைகள் ஸ்லேட் குச்சிகளை சாப்பிடுவதை ஊக்குவிக்கும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், அமேசான் நிறுவனம் சாக்பீஸ் மற்றும் பென்சிலை சாப்பிடும் பழக்கம் உடையவர்களை இலக்காக வைத்து இந்த பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.