"எனக்கு நடந்தது மறுபடியும் யாருக்கும் நடக்கக்கூடாது" என்று வசனத்துடன், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராக்கெட்ரி: நம்பி எஃபெக்ட் டிரெய்லர் வெளியானது.


 





நடிகர் மாதவன், 'ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார், அதில் அவர் நாயகனாக  நடிக்கிறார். உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இந்திய விஞ்ஞானியும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) விண்வெளி பொறியியலாளருமான நம்பி நாராயணனைப் பற்றி திரைப்படம் இது.  அனைவராலும் மிகவும்  எதிர்பார்க்கப்பட்ட படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.




கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு வெளியாகியுள்ளது ட்ரெய்லர். நடிகர் சூர்யா , ஒரு பத்திரிகையாளராக கேமியோவில் வருகிறார், இந்த படத்தில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிக்கும் மாதவனை நேர்காணல் செய்கிறார். விண்வெளி பொறியியலாளர் நம்பி நாராயணன் தனது நிஜ வாழ்க்கையில் சென்ற கடினமான பயணத்தின் ஒரு சுருக்கத்தை இது நமக்கு வழங்குகிறது.




நம்பி நாராயணனாக நடிகர் மாதவனின் தோற்றம் அனைவரின் பார்வையை ஈர்த்துள்ளது . 27 வயதில் இருந்து 70 வயது வரை மொத்த உருவ மாற்றம் வியக்கவைத்துள்ளது  வயதான தோற்றத்தில் மட்டும் விக் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றவை அனைத்தும் இந்த படத்திற்கான நடிகர் மாதவன் செய்த கடின உழைப்பை காட்டுகிறது . நடிகை சிம்ரன் மாதவனுக்கு ஜோடியாக இணைகிறார் .15 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்து நடித்துள்ள படம் இது .




இந்த படத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 100 கோடிக்கு மேல் இருக்கும். மேலும் இந்தியில் ஷாருக்கான் பத்திரிகையாளராக கேமியோவில் தோன்றுவார். வெல்லம் என்ற மலையாள திரைப்படத்தை இயக்கிய பிரஜேஷ் சென் இணைந்து இப்படத்தை  இயக்கியுள்ளார். இப்படத்தை ஸ்ரீஜேஷ் ராய் படமாக்கியுள்ளார், எடிட்டிங் பிஜித் பாலா, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்  .