இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, சுத்தமான காற்று, மற்றும் போதிய வசதிகளுடன் வாழ்வதற்கு மக்கள் விரும்புகின்றனர்.  சென்னையின் மத்திய பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் போய், வளர்ந்து வரும் புறநகர் பகுதிகளில் வீடு வாங்க விரும்புகின்றனர்.


மக்களுடையை இந்த மனநிலை மாற்றத்தால் சென்னை புறநகர் பகுதிகளில் வீடு விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதோடு நிலம் வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வழியான தாம்பரத்தை தாண்டியுள்ள பகுதிகள், திருவள்ளூர் மாவட்ட எல்லை, ஈசிஆர், பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகள் மக்களின் விருப்பமாக உள்ளன. 


 



                                                     


அந்த வரிசையில் மக்கள் விரும்பும் இடமாக மாறியுள்ளது திருமழிசை.  சென்னையின் எந்த பகுதிக்கும் விரைவாக வர முடியும் என்பதாலும் சுத்தமான இரைச்சலற்ற பகுதி என்பதாலும் வீடு விற்பனைகள் களை கட்ட தொடங்கியுள்ளன. குறிப்பாக அர்பன் ரைஸ் போன்ற நிறுவனங்கள் நியூ போரூர் என்ற கான்செப்டுடன் திருமழிசையில் டவுன்சிப்பை உருவாக்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது. 


திருமழிசை ஏன் சரியான தேர்வு?


சென்னையில் வீடு வாங்க நினைப்போரின் எதிர்பார்ப்புகளில் சில விஷயங்கள் முதலிடத்தில் இருக்கும். 24 மணி நேர தண்ணீர் வசதி, மழை வெள்ளத்தால் மூழ்காமல் இருத்தல், தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஏற்ற வசதி, அதிவேக இண்டெர்நெட் வசதி, அருகிலெயே பேருந்து, ரயில், நிலையம், என்று சில.


மேற்கூறிய அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் வளர்ந்து வரும் இடம்தான் திருமழிசை. இதனை மனதில் வைத்தே கட்டுமான நிறுவனங்களும் சகல வசதிகளுடன் கூடிய வீடுகளையும் அடுக்குமாடி குடியிருப்புகளையும் இங்கு கட்டி வருகின்றனர். 


குறிப்பாக திருமழிசையை பொருத்தவரை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 20 நிமிட தூரத்திலும், போரூரில் இருந்து 15 நிமிடத் தொலைவிலும் உள்ளதால் பயணம் செய்வதில் சிக்கல் இருப்பதில்லை. 


அதே போல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைப்போருக்கு, அருகிலேயே சென்னை பப்ளிக் பள்ளி, ஸ்பார்ட்டன் இன்ட்டர்நேஷனல் பள்ளி, செயின்ட் ஜான்ஸ் இன்ட்டர்நேஷனல் பள்ளி, சைதன்யா உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பள்ளிகள் இருப்பது நிம்மதியை தருகிறது. 


 


                                                                               
                                                         


உயர்கல்வி பயில நினைப்போருக்கும் தரமான கல்வி நிறுவனங்களாக பார்க்கப்படும் ஸ்ரீ சாஸ்தா பொறியியல் கல்லூரி, ராஜலட்சுமி, பனிமலர் உள்ளிட்ட பொறியியல் கல்லூரிகளும் அருகிலேயே உள்ளன.


வீட்டில் இருந்தே வேலை செய்யும் பழக்கம் அதிகரித்துள்ளதால், அதிவேக இண்டெர்நெட் பலரின் முக்கிய தேவை ஆக உள்ளது. இப்பகுதியில் அனைத்து விதமான நிறுவனங்களின் பைபர் கேபிள் வழி இணைய வசதியும் கிடைக்கிறது. 


நியூ போரூர் தெரியுமா? 


அர்பன் ரைஸ் சார்பில் திருமழிசையில் உருவாக்கப்படும் ப்ராஜெக்ட்தான் “நியூ போரூர்”. மக்களுடைய அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. 


குறிப்பாக நியூயார்க் டவுன் ஸ்டைல் டிசைன். உள்ளே வந்துட்டாலே எல்லாமே கிடைக்கும். வெளியே போக வேண்டிய தேவை இருக்கவே இருக்காது எனும் அளவுக்கு வசதிகள் இருக்கும். 


நம் ஊரிலேயே குழந்தைகளுக்கெனத் திறன் வளர்ப்பு வகுப்புகளுடன் கூடிய ஒரே டவுன்ஷிப் இது என்று சொல்லலாம். சுமார் 4 ஏக்கர் அளவுக்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை வேளையில் ஜாலியாக வாகிங், நண்பர்களோடு சேர்ந்து பேச சிட்டிங் ஏரியா, என மனதுக்கும் உடலுக்கும் இதம் தரும்  இடமாக உருவாக்க படுகிறது


அதோடு ஒர்க் ப்ரம் பார்க் எனும் புது கான்செப்டும் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  வீட்டில் இருந்து வேலை செய்வது பலருக்கும் அயர்ச்சியை குடுக்க ஆரம்பித்துள்ளது. இவர்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்க பட்டுதுதான் “ஒர்க் ப்ரம் பார்க்” மற்றும் “கோ-ஒர்கிங் ஸ்பேசஸ்” கான்செப்ட். அணைத்து வசதிகளும் படைத்த “நியூ ஏஜ்” வீடுகள் என்று இவைகளை குறிப்பிடலாம். 


போரூரின் மிக அருகில் உள்ள இந்த “நியூ போரூர்” சரியான விலையில் தரமான மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட வீடு வாங்க சரியான டவுன்ஷிப் என்று சொன்னால் அது மிகை ஆகாது


மேலும் விவரங்களுக்கு: இந்த தளத்தை பார்க்கவும்