அட்சய திருதி அன்று நகை வாங்கினால் செல்வம் மற்றும் வளம் பெருகும் என்கிற நம்பிக்கை உள்ள நிலையில் இன்று ஏராளமான மக்கள் தங்கத்தை வாங்க ஆர்வம் காட்டுவார்கள், இதனால் தங்கத்தின் விலை குறையுமா குறையாதா என்கிற குழப்பம் மக்களிடையே நிலவி வந்தது.
தங்க விலையில் ஏற்றம் இறக்கம்:
ஆபரணத்தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் ஏற்ப்பட்டு வருகிறது, அமெரிக்க மற்ற நாடுகளுக்கு விதிக்கும் வரியால் உருவான வர்த்தக ரீதியிலான போர், உலக் பொருளாதாரத்தில் ஏற்ப்படும் மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையில் இந்த பெரிய ஏற்றம் இருந்து வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ57,200-க்கு விற்கப்பட்டது, பிப்ரவரி மாதத்தில் விலை ஏற்றம் கண்டு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ62,000 கடந்தது, மார்ச் மாதம் இது மேலும் உயர்ந்தது, ஏப்ரல் மாதத்தில் தங்க விலை புதிய உச்சத்தை அடைந்தது. கடந்த ஏப்ரல் 22 ஆம் சவரனுக்கு 2200 ரூபாய் உயர்ந்து, சவரன் 74,320 விற்கப்பட்டது.
இந்த விலை ஏற்றத்தால் அனைத்து தரப்பட்ட மக்களும் தங்க விலை ஏற்றத்தை பார்த்து கதிகலங்கி நின்றனர்.
அட்சய திருதியில் காப்பாற்றிய தங்கம்:
அட்சய திருதியான இன்று பொதுமக்கள் தங்க நகைகளை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள், இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்து வந்தது, நேற்று சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து சவரன் ரூ;71,840-க்கு விற்பனையானது. அதனால் அட்சய திருதியான இன்று தங்கத்தின் விலை உயறுமா என்று மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர், ஆனால் மக்களுக்கு வாயில் சக்கரையை அள்ளிப்போடும் இனிப்பு செய்தியாக சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்றும் இதனால் நேற்றைய விலைக்கே தங்கம் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ;71,840-க்கும், ஒரு கிராம் ரூ-8980-க்கு விற்கப்படுகிறது.