அட்சய திரிதியை அல்லது அட்சய் தீஜ் என்றழைக்கப்படும் இந்த நாள் இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். இது ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திரிதியை நாள் என நம்பப்படுகிறது. 


அட்சய திரிதியில் தங்க நகை வாங்கினால் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது ஐதீகம். அதனால் பலரும் அந்த தினத்தன்று நகை வாங்க விருப்பப்படுவர். இந்நிலையில் நேரடியாக நகைக்கடைக்குச் சென்று தங்கம் வாங்க முடியாது என நினைப்பவர்கள் Google Pay, Paytm மூலம் தங்க நகைகளை வாங்கலாம்.




கூகுள் பேவில் தங்க நகை வாங்குவது எப்படி? 


1.கூகுள் பே ஓபன் செய்து New என்பதை டாப் செய்யுங்கள்
2.Search பாரில் Gold Locker என்பதை தேடவும்
3.பிறகு Buy என்பதை க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் இன்றைய தேதிக்கான தங்க விலை தெரியப்படுத்தும். நகையை வாங்கத் தொடங்கிய அடுத்த 5 நிமிடத்திற்கு அதே விலை லாக் செய்யப்படும். 
4.நீங்கள் வாங்கப்போகும் பணத்தை பதிவிட்டு நகையை வாங்கலாம். ஒரே நாளில் ரூ.50ஆயிரத்துக்கு தங்க நகை வாங்கலாம்.
5.பண பரிவர்த்தனை முடிந்தவுடன் அடுத்த சில நிமிடங்களில் குறிப்பிட்ட நகை லாக்கரில் இருக்கும். நகையை வாங்கத் தொடங்கிபின் அதனை கேன்சல் செய்ய முடியாது. வேண்டும்மென்றால் அன்றைய விலைக்கு விற்க முடியும்.


பேடிஎம் மூலம் நகை வாங்குவது எப்படி?


1.பேடிஎம் செயலியை ஓபன் செய்து All services என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
2.Search க்கு சென்று Gold என டைப் செய்ய வேண்டும்
3.பிறகு பணத்தை க்ளிக் செய்து எவ்வளவு நகை வேண்டுமென்பதை குறிப்பிட வேண்டும்
4.எல்லா ஆப்ஷன்களையும் முடித்துவிட்டு டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம். 


இந்த ஆண்டு அட்சய திரிதியை என்று வருகிறது?
இந்த ஆண்டு அட்சய திரிதியை நாளானது மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது.


அட்சய திரிதியை பூஜை நேரம் எது?
அட்சய திரிதியை பூஜை நேரமானது அதிகாலை 05:39 மணி முதல் மதியம் 12:18 மணி வரை. இந்த நேரத்தில் பூஜை செய்தால் எல்லா நலமும் வளமும் பெறலாம்.


திரிதியை தொடங்கும் நேரம்: அதிகாலை 05:18 மே 03, 2022
திரிதியை முடியும் நேரம்:  காலை 07:32 மே 04, 2022


ஒவ்வொரு நகரத்தில் அட்சய திரிதியை முகூர்த்த நேரம் எது?
06:06 am to 12:32 pm - புனே
05:39 am to 12:18 pm - புதுடெல்லி
05:48 am to 12:06 pm - சென்னை
05:47 am to 12:24 pm - ஜெய்ப்பூர்
05:49 am to 12:13 pm - ஹைதராபாத்
05:40 am to 12:19 pm - குர்கான்
05:38 am to 12:20 pm - சண்டிகர்
05:18 am to 11:34 am - கொல்கத்தா
06:10 am to 12:35 pm - மும்பை
05:58 am to 12:17 pm - பெங்களூரு
06:06 am to 12:37 pm - அகமதாபாத்
05:38 am to 12:18 pm - நொய்டா


அட்சய திரிதியை என்பதன் அர்த்தம் என்ன?
அட்சய திரிதியை என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அட்சயா என்றால் வளம், வெற்றி, இன்பம், நம்பிக்கை. திரிதியை என்றால் நிலவின் மூன்றாம் பிறை. இந்த நாளானது இந்து காலண்டரின் படி சித்திரை மாதத்தின் மூன்றாவது சந்திர தினத்தில் வருகிறது.