ஏர்டெல் சிம் தெரியும்? அது என்ன ஏர்டெல் வங்கி? ஏர்டெல் நிறுவனம் பேங்க் வைத்திருக்கிறதா? என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறதா? ஆமாம். ஏர்டெல் நிறுவனம் வங்கி வைத்திருக்கிறது. வங்கி என்றால் டிஜிட்டல் வங்கி. நாளுக்கு நாள் டிஜிட்டல் உலகம் பிரபலமடைந்து வரும் நிலையில் டிஜிட்டல் வங்கி முறையில் ஏர்டெல் அடுத்தடுத்து முன்னோக்கி செல்கிறது. மக்களிடையே எளிதில் சென்றடையும் திட்டங்களையே ஏர்டெல் முன்னெடுத்தும் வருகிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ஏர்டெல் பேமண்ட் வங்கி என்பது ஆன்லைன் வங்கி. பணம் முதலீடு, பணம் எடுத்தல், பணம் அனுப்புதல் போன்ற பணம் தொடர்பான வேலைகளை டிஜிட்டல் முறையில் அதற்கான செயலிகள் மூலமே பெற முடியும். இந்த பேம்ண்ட் பேங்க் சமீபத்தில் பிரபலமடைந்தது. காரணம் வட்டி. சாதாரண வங்கிகளில் கொடுக்கப்படும் வட்டியை விட அதிக வட்டி கொடுப்பதாக அறிவித்தது ஏர்டெல்.
அதாவது, கடந்த மாதம் பேமண்ட் வங்கிகளில் டெபாசிட் தொகையை இரண்டு லட்சமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியது. உடனடியாக ஒரு லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் 6% வட்டி என அதிரடியாக அறிவித்தது ஏர்டெல்.இது வழக்கமான வங்கியை விட அதிக வட்டி என்பதால் பலரும் டெபாசிட் செய்ய ஆர்வம் காட்டினர். இந்நிலையில் அடுத்த அதிரடியாக தங்கம் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். டிஜிகோல்ட் என்ற திட்டத்தை சேஃப்கோல்ட் நிறுவனத்துடன் கைகோத்து ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல் தேங்க்ஸ் செயலி மூலம் 24கேரட் தங்கத்தை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடு செய்த தங்கத்தை ஏர்டெல் வங்கியில் கணக்கு வைத்துள்ள உங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர் என யாருக்கு வேண்டுமானாலும் ஃகிப்ட் என்ற முறையிலும் அனுப்பலாம். அந்த வசதியில் இந்த டிஜிட்டல் வங்கியில் உள்ளது.
வரம்பு ஏதும் இல்லை என்றும், செயலி மூலமாகவே தங்கத்தை விற்பனையும் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெரிவித்த ஏர்டெல் பேமண்ட் வங்கியின் முதன்மை நிர்வாக அலுவலர் கணேஷ் அனந்தநாராயணன், டிஜிகோல்ட் ஏர்டெல் பேமண்ட் வங்கியில் சேர்க்கப்பட்ட புதிய முறை. எங்களது செயலி மூலம் டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் இனி தங்கத்தை முதலீடு செய்யலாம். தினமும் முதலீடு செய்யும் வகையில் இன்னும் சில திட்டங்களையும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.
ஏர்டெல் உடன் கைகோத்தது குறித்து பேசிய ஃசேப்கோல்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கவுரவ் மதுர், தங்கம் சிறந்த முதலீடாக சில ஆண்டுகளாக உள்ளது. அப்படியான முதலீட்டை டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொடுக்க ஏர்டெல் உடன் கைகோத்துள்ளோம். மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது என்றார்.