மொபைல் ரீசார்ஜுக்கு போன்பேவைத் தொடர்ந்து பேடிஎம்மிலும் இனி மொபைல் ரீசார்குக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் ரீசார்ஜுக்கு ஏற்கனவே போன்பே கட்டணம் வசூலித்து வந்த நிலையில் தற்போது பேடிஎம்மிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் தெரிவித்துள்ளது. இக்கட்டண முறையானது ரூபாய் 1- லிருந்து 6- வரை வசூலிக்கப்படுகிறது. அதாவது ரீசார்ஜ் செய்யும் தொகையினைப் பொறுத்து ரீசார்ஜுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டுவிடுகிறது.
யுனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (UPI) இந்தியாவில் தொடங்கப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்று இந்தியாவில் எதிர்பார்த்ததை விட அதிகமான UPI பரிவர்த்தனைகள் நடக்கின்றன. கையில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் UPI பணம் செலுத்துகிறார்கள். சிலர் Paytm இலிருந்தும், சிலர் Google Pay இலிருந்தும் மற்றும் சிலர் PhonePe இலிருந்தும் பணம் செலுத்துகிறார்கள். தற்போது போன்பேவைத் தொடர்ந்து பேடிஎம்மிலும் மொபைல் ரீசார்ஜுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, ரூ. 50க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ. 1 வசூலிக்கப்படும், ரூ.100க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் ரூ.2 வசூலிக்கப்படுகிறது.
2019-இல் டிவீட்
பேடிஎம் அதன் வருவாயை அதிகரிப்பதற்கான சோதனைகளில் ஒன்றாக சில பயனர்களிடமிருந்து கூடுதல் கட்டணத்தி எடுத்துக்கொள்கிறது என பயனர் ஒருவர் 360 கெஜட்டிற்கு தெரிவித்திருந்தார்.50 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான ரீசார்ஜ் செய்வதற்கு கட்டணம் இல்லை. PhonePe பயனர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, இது டிஜிட்டல் இந்தியாவா என்று கேட்கிறார்கள்.ஏற்கனவே தனது டிவிட்டர் பக்கத்தில் 2019ம் ஆண்டு பேடிஎம் ரீசார்ஜ்களுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கவில்லை என தெரிவித்திருந்தது.
போன்பே, பேடிஎம் தவிர கூகுள் பே, ஃப்ரீசார்ஜ் மற்றும் அமேசான் பே போன்ற தளங்கள் இன்னும் இலவச ரீசார்ஜ் வசதியை வழங்குகின்றன. ரீசார்ஜ் தவிர, அனைத்து வகையான கட்டணங்களும் முன்பைப் போல இலவசமாக இருக்கும், அதாவது எந்தவிதமான பரிவர்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் போன் கூறியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்