இந்தியாவின் மிகப்பெரிய பசுமை ஆற்றல் உற்பத்தி நிறுவனமும், உலகின் முன்னணி பசுமை ஆற்றல் நிறுவனமுமாக திகழ்வது அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம். இந்த நிலையில், இந்த குழுமத்தின் இயக்குனர்கள் குழு 9 ஆயிரத்து 350 கோடிக்கு ப்ரோமோட்டார்களுக்கு முன்னுரிமை உத்தரவுகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
9,350 கோடி முதலீடு:
ஒரு பங்கின் விலை ரூபாய் 1,480.75 என்ற மதிப்பில் இந்த 9 ஆயிரத்து 350 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பசுமை ஆற்றல் உற்பத்தியின் மூலதனச் செலவினங்கள் அதிகப்படுத்தப்படுவதற்கும், அதன் பணிகளை துரிதப்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் 2030ம் ஆண்டிற்குள் 45 கிகாவாட் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது. தற்போது 20.6 கிகாவாட் உற்பத்தியுடன் அதானி பசுமை ஆற்றல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆயிரத்து 350 கோடி ரூபாய் 45 கிகாவாட் இலக்கை அடைவதற்கு உதவும் என்றும் கருதப்படுகிறது. 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலத்தில் பசுமை ஆற்றல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
45 கிகாவாட் உற்பத்தி இலக்கு:
இந்த முதலீடு தொடர்பாக பேசியுள்ள அதானி குழுமத்தலைவர் அதானி, அதானி குடும்பத்தின் இந்த முதலீடு எங்கள் அர்ப்பணிப்பை காட்டுகிறது. நமது தேசத்தில் தூய்மையான எரிசக்தி கனவை நனவாக்குவதுடன், சமமான ஆற்றல் மாற்றத்தையும் ஏற்படுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதானி குழுமம் 1.36 பில்லியன் அமெரிக்க டாலரை கட்டுமான வசதிக்காக அறிவித்தது. குஜராத்தின் கவ்டாவில் 2 ஆயிரத்து 167 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களை கட்டுவதற்காக இந்த தொகை அறிவிக்கப்பட்டது. இதன்மூலமாகவும் 2030ம் ஆண்டுக்குள் அவர்களின் இலக்கான 45 கிகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என்று அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: குறைவான வரியில் சிறந்த ஆயுள் காப்பீடு திட்டங்கள்.. வருவாயை பெருக்க டிசம்பர் மாதத்திற்கான வியூகங்கள்
மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: வடக்கில் பாஜக வேற லெவல்.. ஆனால் தெற்கில் ஒன்னும் செய்ய முடியல.. கருத்துக்கணிப்பில் பகீர்