இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமங்களில் ஒன்று அதானி குழுமம். இந்த குழுமம் பல்வேறு துறைகளில் தொழில்களை செய்து வருகின்றன. அந்தவகையில் அதானி குழுமத்தின் மீடியா துறையான ஏ.எம்.ஜி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமாக விஸ்வபிரதான் கமர்சியல் (விபிசிஎல்) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. 


இந்நிலையில் அதானி குழுமத்தின் இந்த விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டிவியின் பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 29.6% பங்குகளை விபிசிஎல் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் 26% பங்குகளையும் பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாக கூறியுள்ளது. 






விபிசிஎல் நிறுவனம் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் 99.5% பங்குகளை வாங்க உள்ளது. இந்த ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம் என்.டி.டிவியின் 29.6% பங்குகளை வைத்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி குழுமம் தனியார் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 


இந்த முடிவு தொடர்பாக ஏ.எம்.ஜி நிறுவனத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, “ஏ.எம்.ஜி நிறுவனத்திற்கு இந்த முடிவு ஒரு மையில் கல்லாக அமையும். ஏ.எம்.ஜி நிறுவனம் இந்திய குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலை கொடுக்க வேண்டும் என்று குறிக்கோள் உடன் உள்ளது. அதற்கு இந்த தனியார் செய்தி நிறுவனம் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருக்கும். ஆகவே இந்த தனியார் செய்தி செனலின் தரத்தையும், செய்தி வெளியிட்டு திறனையும் நாங்கள் மேம்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 


என்.டி.டிவி செய்தி நிறுவனம் சார்பில் 3 செய்தி செனல்கள் தற்போது உள்ளன. என்.டி.டிவி 24*7, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி ப்ராஃபிட் ஆகிய 3 செனல்கள் உள்ளன. மேலும் ஆன்லைனிலும் இந்த செய்தி நிறுவனம் நிறையே வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த தனியார் செய்தி நிறுவனத்தை சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிறுவனம் தற்போது வரை மொத்தமாக 421 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிதியாண்டியில் 85 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக 5ஜி ஸ்பெக்ட்ரெம் ஏலத்தில் நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையென்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு.. இலங்கையில் கால்பதித்த அதானி! பிஸினஸும் சர்ச்சையும்!!