தனியார் நபர்களால் ஸ்டார்ட் அப் நிறுவனமாகத் தொடங்கப்பட்டு சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புகொண்ட நிறுவனங்களாக மாறுபவை `யூனிகார்ன்’ என அழைக்கப்படும். கடந்த ஆண்டு, இந்தியா முழுவதும் சுமார் 82.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 42 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு, இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகமாக தொடங்கப்பட்டுள்ளன. 


தற்போதைய 2022ஆம் ஆண்டிலும் யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதுவரை இந்தப் பட்டியலில் 17 நிறுவனங்கள் இணைந்துள்ளன. மாமா எர்த் நிறுவனம் தொடங்கி சமீபத்திய ஃபிசிக்ஸ் வால்லா, பர்பிள் முதலான நிறுவனங்கள் வரை, இந்த ஆண்டு யூனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்... 


1. MamaEarth - அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனம்
2. Fractal Analytics - செயற்கை நுண்ணறிவுப் பகுப்பாய்வு மேற்கொள்ளும் மென்பொருள் தயாரிப்பு நிறுவனம்
3. LEAD School - கல்விக்கான தொழில்நுட்பம் தயாரிக்கும் நிறுவனம்
4. Darwinbox - மனித வள மேலாண்மைக்கான தொழில்நுட்ப நிறுவனம்
5. DealShare - சமூகத்தின் சில்லறை வர்த்தகத்திற்கான ஸ்டார்ட் அப் நிறுவனம்
6. Livspace - வீட்டின் உள்புறம் வடிவமைப்பு மற்றும் புனரமைப்பு நிறுவனம்
7. ElasticRun - வர்த்தகங்களுக்கு இடையிலான இணைய வழியிலான வியாபாரம் ஏற்படுத்தித் தரும் நிறுவனம்
8. Xpressbees - சரக்குகள் போக்குவரத்துக்கான நிறுவனம்



9. Uniphore - மனிதர்களுடன் உரையாடும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் தயாரிக்கும் நிறுவனம்
10. Hasura - GraphQL மென்பொருள் டெவலெபர்
11. CredAvenue - நிதி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்
12. Amagi - ஊடகங்களுக்காகன் தொழில்நுட்பத் தயாரிப்பு நிறுவனம்
13. Oxyzo - நிதி மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம்
14. Games 24x7 - கேம்ஸ் விளையாடுவதற்கான தளம்
15. Open - நியோபேங்கிங் என்றழைக்கப்படும் டிஜிட்டல் வங்கி ஸ்டார்ட் அப் நிறுவனம்
16. Physics Wallah - கல்வித் தொழில்நுட்ப நிறுவனம்
17. Purplle - அழகுசாதனப் பொருள்கள் விற்பனை நிறுவனம்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண