ஜெல்லி மிட்டாய்
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தும் காரணத்தால் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை மிட்டாய்கள் இந்தியாவில் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
லைஃப்பாய் சோப்
மனித சருமத்திற்கு ஆபத்து விளைவிக்கும் என்பதால் அபாயகரமானதாக கருதப்படுகிறது. இருப்பினும் சில வெளிநாடுகளில் கால்நடைகளை குளிப்பாட்ட மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மனிதர்களுக்கான சோப்பாக அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பூச்சிக் கொல்லிகள்
உலகின் பல்வேறு நாடுகளில் 60 வகையான பூச்சிகொல்லிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை பூச்சிக்கொல்லிகள் இந்தியாவில் தாராளமாக கிடைக்கின்றன. தாவரங்களுடன் பூச்சிக்கொல்லிகள் வினைபுரிந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ரெட்புல்
பிரான்ஸ், டென்மார் நாடுகளில் ரெட்புல் ஊக்க பானத்திற்கு அதிகாரபூர்வத் தடை விதிக்கப்பட்டுள்ளது. லித்துன்னியாவில் 18 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு இந்த பாணத்தை விற்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தால் இதய பிரச்னைகள், மனச்சோர்வு, உயர்ரத்த அழுத்தம், வலிப்பு நோய் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
டிஸ்பிரின்
மருத்துவ ரீதியாகவும் சட்டரீதியாகவும் இந்தியாவில் பல மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. திட்டதிட்ட நாம் அனைவரும் இந்த வகையான மருந்துகளை பயன்படுத்தி வருகிறோம். இந்த அபாயகரமான மருந்துகளின் பட்டியலில் டிஸ்பரினும் அடங்கும். இந்த வகை மருந்துகள் வீடுகளில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பதப்படுத்தப்படாத பால்
ஆபத்தான நுண்ணுயிரிகள், கிருமிகளை கொண்டுள்ளதால் அமெரிக்கா, கனடா நாடுகளில் பதப்படுத்தப்படாத பாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் பதப்படுத்தப்படாத பால் விற்பனைக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
நிமுலிட் வலி நிவாரணி மாத்திரை
வலி நிவாரணியாக உள்ள நிமுலிட் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தால் கல்லீரல் பாதிப்பு உண்டாக்கும் என்பதால் மேற்கண்ட நாடுகளில் இவை தடை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுசூகி ஆல்டோ 800
பாதுகாப்பு சோதனைகள் மற்றும் வழிகாட்டுதல் நடைமுறைகளுக்கு இணங்க மறுத்ததன் காரணமாக மாருதி சுசூகி ஆல்டோ 800 மாடல் கார் உலகின் பலநாடுகளில் சட்டப்பூர்வ தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கார் இந்திய கார் சந்தையில் மிகப்பிரபலாமான மாடலாக இருந்து வருகிறது.
டாடா நேனோ
குளோபல் NCAP ஏற்பாடு செய்த சுயாதீன விபத்து சோதனைகளுக்கு டாடா நேனோ கார். இந்தியாவை தவிர்த்த மற்ற வெளிநாடுகளில் டாடா நேனோ கார்கள் சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளன.
கிண்டர் ஜாய்
கிண்டர் ஜாய் வகை சாக்லேட்டுகளில் உள்ள பொம்மைகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை பொம்மைகளால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்தவகை சாக்லேட்டுகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.